Aathukara Mama Song Lyrics

Kattalai·1993

Kattalai movie poster
Singer
K. S. Chithra and Mano
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆத்துக்கார மாமா
நான் பாத்து ஏங்கலாமா

பெண்: ஆத்துக்கார மாமா
நான் பாத்து ஏங்கலாமா
பூத்த பூவ நாரில்
நீ கோர்த்து வாங்கு மாமா
காத்திருக்கிறேன்
நீண்ட நேரமா ஹோய்
வா வா நேசமா
நீ வந்தால் தோஷமா

ஆண்: ஒத்து ஊதும் மாமா
நான் ஆகவில்லை மானே
ஒத்திப் போ நீ பாமா
நான் கற்பு உள்ள ஆணே
ரூட்ட மாத்துற
சூட்ட ஏத்துற ஹோய்
வேணா சோதனை
ஹேய் ஏம்மா ரோதனை

ஆண்: ஒத்து ஊதும் மாமா
நான் ஆகவில்லை மானே
ஒத்திப் போ நீ பாமா

ஆண்: மீறாதே எல்லைக் கோடு
மாறிப் போகும் எந்தன் மூடு
ஒட்டாதே தூர நின்னு
வேற பாட்டு பாடு நீ

பெண்: பாடாத பாட்டப் போல
பொண்ணு இந்த பூமி மேல
நின்னாலே லாபம் என்ன
தாகம் தீர்க்கப் பாரு நீ

ஆண்: வீணாகச் சீண்டுற
வம்பாகத் தூண்டுற
வில்லங்கம் பண்ணுற
வில்லம்பு பூட்டுற

பெண்: உன்ன அடைய....ஆ
என்ன பண்ணணும்....ம்ம்....
சொல்லு கேக்குறேன்
நான் செஞ்சு பாக்குறேன்

ஆண்: ஒத்து ஊதும் மாமா
நான் ஆகவில்லை மானே
ஒத்திப் போ நீ பாமா
நான் கற்பு உள்ள ஆணே

பெண்: பொன் மாலை நேரம் வந்தால்
பூ வாங்கிக் கையில் தந்து
வேறென்ன வேணுமின்னு
காதில் வந்து கேக்கணும்

ஆண்: தஞ்சாவூர் பொம்ம போல
தலையாட்டும் ஆளும் அல்ல
ஏன்மா நான் பொண்ணு கிட்ட
மண்டி போட்டு தோக்கணும்

பெண்: வீணாகப் போகுது
நம்மோட வாலிபம்

ஆண்: ஹ ஹா

பெண்: சேர்ந்தேதான் ஆகணும்
நம்மோட ஜாதகம்

ஆண்: அப்புறம் என்ன தப்பு நடக்கும்
நானும் மாறணும்
ஹேய் நீதான் காரணம்

பெண்: ஆத்துக்கார மாமா
நான் பாத்து ஏங்கலாமா
பூத்த பூவ நாரில்
நீ கோர்த்து வாங்கு மாமா

ஆண்: ரூட்ட மாத்துற
சூட்ட ஏத்துற ஹோய்
வேணா சோதனை
ஹேய் ஏம்மா ரோதனை

பெண்: ஹேய் ஆத்துக்கார மாமா

ஆண்: ம்ம்

பெண்: நான் பாத்து ஏங்கலாமா

ஆண்: ஒத்திப் போ நீ பாமா
நான் கற்பு உள்ள ஆணே

A little space to find your voice.

About Aathukara Mama

Aathukara Mama is a song from Kattalai (1993). Performed by K. S. Chithra, Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer