En Aasai Song Lyrics

Kattalai·1993

Kattalai movie poster
Singer
K. S. Chithra and Malaysia Vasudevan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என் ஆசை வாழைக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே

ஆண்: கல்யாணக் காட்சி முடித்தே
ஹோய் ஹோய்
கண்ணாளன் கொஞ்சும் கிளியே

ஆண்: பூங்கழுத்துக்கு
ஒரு தாலி வந்தது
பூ மரத்துக்கு
ஒரு வேலி வந்தது
வாழை மரம் பந்தல் இன்றி
மாலை வந்தது

ஆண்: என் ஆசை வாழைக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே

ஆண்: நான் ஒவ்வொன்றாய்ச்
சொல்லவா
உன்னைத்தான் கிள்ளவா
மானே இளமானே

ஆண்: மொத்தத்தைக் கொள்ளவா
மிச்சத்தை வைக்கவா
தேனே மலைத்தேனே

பெண்: நான் கன்னித்தேன் அல்லவா
தின்னத்தான் சொல்லவா
தாகம் வரும் நேரம்

பெண்: மன்னரில் பல்லவா
மண்ணிலே நல்லவா
தேகம் உன்னைச் சேரும்

ஆண்: உண்டான நேசம்
உருவான பாசம்
எல்லாம் நீதானே
என் காதல் தேசம்

பெண்: கண்ணான கண்ணா
நீ சொன்னால்
என் உள்ளத்தில்
வெள்ளம் பொங்கும்

ஆண்: என் ஆசை வாழைக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே

ஆண்: கல்யாணக் காட்சி முடித்தே
ஹோய் ஹோய்
கண்ணாளன் கொஞ்சும் கிளியே

பெண்: எனைத் தென்றல்தான்
தொட்டதும்
தீயைப் போல் சுட்டதும்
ஏனோ அது ஏனோ

பெண்: எண்ணங்கள் கெட்டதும்
அச்சங்கள் விட்டதும்
ஏனோ அது ஏனோ

ஆண்: அப்பப்போ ஏதேதோ
கற்பிக்கும் காதல் நோய்
தானோ இது தானோ

ஆண்: சிப்பிக்குள் தன்னாலே
முத்துக்கள் உண்டாக
தானோ அது தானோ

பெண்: புல்வெளி மேலே
பனி நீரைப் போலே
உன் மடி மேலே உறவாடும் நாளே

ஆண்: முத்தான முத்து பூங்கொத்து
பூ மஞ்சத்தைப் போட்டுக் கொள்ளு

பெண்: உன் ஆசை வாழக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே

பெண்: கல்யாணக் காட்சி முடித்தே
ஹோய் ஹோய்
கண்ணாளன் கொஞ்சும் கிளியே

பெண்: பூங்கழுத்துக்கு
ஒரு தாலி வந்தது
பூ மரத்துக்கு
ஒரு வேலி வந்தது
வாழை மரம் பந்தல் இன்றி
மாலை வந்தது

ஆண்: என் ஆசை வாழைக் குருத்தே
ஹோய் ஹோய்
பொன்னாரம் கட்டும் மயிலே

ஆண்: கல்யாணக் காட்சி முடித்தே
ஹோய் ஹோய்
கண்ணாளன் கொஞ்சும் கிளியே

A little space to find your voice.

About En Aasai

En Aasai is a song from Kattalai (1993). Performed by K. S. Chithra, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer