Kannan Yarukku Sontham Song Lyrics

Mounam Kalaikirathu·1986

Mounam Kalaikirathu movie poster
Singer
P. Susheela
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ ஓஓஓஓஓ

பெண்: கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக

பெண்: கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக

பெண்: இமை வந்து அடிப்பதால்
விழியென்ன வெறுக்குமா
பொன்னென்ன புண்ணாகுமா

பெண்: சிறகுகள் அடிப்பதால்
கிளிக்கென்ன வலிக்குமா
கோபங்கள் உண்டாகுமா

பெண்: உன் பாதங்கள் என் தேகங்கள்
கண்ணா என்னை கண்ணால் பாருங்கள்

பெண்: கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக

பெண்: தனிமையில் தவிக்கிறேன்
தனக்குள்ளே துடிக்கிறேன்
பேசாத பெண்ணாகினேன்

பெண்: உன்னை நம்பி இருக்கிறேன்
உயிரை நான் சுமக்கிறேன்
நெஞ்சோடு போராடினேன்

பெண்: உன் வாசகம் என் யாசகம்
நீங்கள் சொன்னால் பெண்மை ஆளாகும்

பெண்: கண்ணன் யாருக்கும் சொந்தம்
என்றும் ராதைக்கு சொந்தம்
ஜென்மம் தந்த பந்தம் அன்பே ஆனந்தம்
உயிரே வருக உறவை தருக

A little space to find your voice.

About Kannan Yarukku Sontham

Kannan Yarukku Sontham is a song from Mounam Kalaikirathu (1986). Performed by P. Susheela. Music by Sankar Ganesh. Lyrics by Chidambaranathan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer