Pallandu Kaalam Nee Song Lyrics

Nee Oru Maharani·1976

Singer
P. Susheela
Lyricist
Kumaradevan
A continuous glide, at your pace.
Text size

பெண்: பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்
பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்
நேரான பாதை நீ செல்லும் பாதை
நெஞ்சார வாழ்த்த வந்தேனே பேதை

பெண்: பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்

முனங்கல்: ..................

பெண்: மேகம் சிந்தும் கண்ணீர்
அது தாகம் தீர்க்கும் தண்ணீர்
மேகம் சிந்தும் கண்ணீர்
அது தாகம் தீர்க்கும் தண்ணீர்
அந்த தாகம் தணிந்த பின்னே
வந்த மேகம் தெரிவதில்லை
இங்கு ஒன்றின் முடிவில் ஒன்று
என்ற உலகின் நியதி உண்டு......

பெண்: பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்

பெண்: விளக்கை ஏற்றி வைத்தேன்
அதன் அடியில் இருளைக் கண்டேன்
அந்த இருளில் உலவுகின்றேன்
அதில் தயக்கம் தானே கொண்டேன்
நான் படிக்க வந்தேன்
இங்கே நானே பாடம் ஆனேன்....

பெண்: பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்

முனங்கல்: ..................

பெண்: மலையில் பிறந்த மங்கை
அவள் தரையில் தவழும் கங்கை
மலையில் பிறந்த மங்கை
அவள் தரையில் தவழும் கங்கை
இங்கு தழுவிச் செல்லும் நதியே
அது தாங்கிக் கொள்ளும் எதையும்
அந்த நதியைப் போல வந்தேன்
என் விதியின் வழியில் செல்வேன்

பெண்: பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்
பல கோடி பாடல் நான் பாட வேண்டும்
நான் பாட வேண்டும் நான் பாட வேண்டும்

A little space to find your voice.

About Pallandu Kaalam Nee

Pallandu Kaalam Nee is a song from Nee Oru Maharani (1976). Performed by P. Susheela. Music by Sankar Ganesh. Lyrics by Kumaradevan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer