Annai Thanthai Song Lyrics

Are You Ok Baby·2023

Are You Ok Baby movie poster
Singer
Shweta Mohan
Lyricist
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

பெண்: அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ
இல்லை யென்றால்
பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ

பெண்: வெண்ணிலவு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா என்னும் பிஞ்சுமொழி
கேட்க மனம் ஏங்கிடுதே

பெண்: அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்: பிஞ்சு விரல் நெஞ்சில் விளையாடி வர
இன்பமே அது கொஞ்சமோ
யாழும் குழல் இன்னிசையும்
என்ன செய்யும்

பெண்: உன் குரல் அதை மிஞ்சுமே
தத்தி தத்தி ஆடி வரும் முத்துமணியே
இரத்தினத்தை மின்ன வைக்கும்
கண்ணின் ஒளியே

பெண்: எட்டு வைத்து கொஞ்சம் கிட்ட வா
பட்டு இதழில் முத்தம்தா
கண்மணி உன்னை அள்ளிக்கொள்ள
ஆசை கொண்டேன்

பெண்: அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்: ரெண்டு பிள்ளை பெண்ணுக்கு பிறந்ததுண்டு
இந்த பிள்ளைக்கோ இங்கு தாய்ரெண்டு
அன்னையர் இருவருக்கும் பிள்ளை வேண்டும்
பிள்ளை எந்த தாய் பக்கம் செல்லுமோ

பெண்: எத்தனை எத்தனை இன்பம் கண்ட உலகில்
அத்தனையும் கூட வரும் என்பதில்லையே

பெண்: சோலை வலி நடந்ததெல்லாம்
பாலைவனம் சென்று சேர்வதற்கா
வாழ்வெல்லாம் ஏதிர் பார்ப்பில்தானா
செல்ல வேண்டும்

பெண்: அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ

பெண்: வெண்ணிலவு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா என்னும் பிஞ்சுமொழி
கேட்க மனம் ஏங்கிடுதே

பெண்: அன்னை தந்தை
ஆக்குவது யார் பிள்ளையன்றோ

A little space to find your voice.

About Annai Thanthai

Annai Thanthai is a song from Are You Ok Baby (2023). Performed by Shweta Mohan. Music by Ilaiyaraaja. Lyrics by Ilayaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer