Athisaya Raagam Song Lyrics

Apoorva Raagangal·1975

Apoorva Raagangal movie poster
Singer
K. J. Yesudas
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அதிசய ராகம்.....
ஆனந்த ராகம்....ம்ம்
அழகிய ராகம்.....ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்.....

ஆண்: அதிசய ராகம்.....
ஆனந்த ராகம்....ம்ம்
அழகிய ராகம்.....ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்.....

ஆண்: அதிசய ராகம்.....

ஆண்: வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்....
மோகம்....ம்ம்ம்....மோகம்....

ஆண்: வசந்த காலத்தில்
மழை தரும் மேகம்
அந்த மழை நீர் அருந்த
மனதினில் மோகம்....

ஆண்: இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில்
அவளொரு பாகம்
இந்திர லோகத்து
சக்கரவாகம்

ஆண்: அதிசய ராகம்.....
ஆனந்த ராகம்....ம்ம்
அழகிய ராகம்.....ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்.....

ஆண்: பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

ஆண்: பின்னிய கூந்தல்
கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம்
அவளது தேகம்

ஆண்: தேவர்கள் வளர்த்திடும்
காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால்
அது என் யோகம்
அது என் யோகம்

ஆண்: ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி

ஆண்: இன்னுமா புரியல

ஆண்: ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால்
காவிரி மாதவி

ஆண்: முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால்
அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

ஆண்: அதிசய ராகம்.....
ஆனந்த ராகம்....ம்ம்
அழகிய ராகம்.....ம்ம் ம்ம் ம்ம்
அபூர்வ ராகம்.....

A little space to find your voice.

About Athisaya Raagam

Athisaya Raagam is a song from Apoorva Raagangal (1975). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer