Poovizhi Vaasalil Song Lyrics

Dheepam·1977

Dheepam movie poster
Movie
Dheepam
Singer
K. J. Yesudas and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

ஆண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

பெண்: அரும்பான காதல் பூவானது
அனுபவ சுகங்களை தேடுது
நினைத்தாலும் நெஞ்சம் தேனானது
நெருங்கவும் மயங்கவும் ஓடுது

பெண்: மோகம் வரும் ஒரு வேளையில்
நாணம் வரும் மறு வேளையில்
இரண்டும் போரடுது
துடிக்கும் இளமை
தடுக்கும் பெண்மை

ஆண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே

பெண்: ஆஹா

ஆண்: இளங்கிளியே கிளியே

பெண்: ஆஹா

ஆண்: அங்கு வரவா தனியே

பெண்: ஆஹா

ஆண்: மெல்ல தொடவா கனியே

பெண்: ஆஹா

ஆண்: இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைக்குது எனையே

பெண்: ஆஹ்ஹா...

ஆண்: இள மாலைத்தென்றல் தாலாட்டுது
இளமையின் கனவுகள் ஆடுது
மலை வாழை கால்கள் தள்ளாடுது
மரகத இலை திரை போடுது

ஆண்: கார்மேகமோ குழலானது
ஊர்கோலமாய் அது போகுது
நாளை கல்யாணமோ
எனக்கும் உனக்கும்
பொருத்தம் தானே

பெண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
இங்கு வரலாம் தனியே
மெல்ல தொடலாம் எனையே
இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைத்தது உனையே

ஆண்: கலைந்தாடும் கூந்தல்
பாய் போடுமோ

பெண்: கலை இது அறிமுகம்
வேண்டுமா

ஆண்: அசைந்தாடும் கூந்தல்
நாமாகவோ

ஆண்: நவரச நினைவுகள்
போதுமா

ஆண்: பூமேனியோ மலர் மாளிகை

பெண்: பொன்மாலையில் ஒரு நாழிகை

ஆண்: நாளும் நான் ஆடவோ

பெண்: அணைக்கும்

ஆண்: துடிக்கும்

பெண்: சிலிர்க்கும் மேனி

பெண்: பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே

ஆண்: ஆஹா

பெண்: இளங்கிளியே கிளியே

ஆண்: ஆஹா

பெண்: இங்கு வரலாம் தனியே

ஆண்: ஆஹா

பெண்: மெல்ல தொடலாம் எனையே

ஆண்: ஆஹா

பெண்: இந்த புன்னகை என்பது சம்மதம்
என்று அழைத்தது உனையே

ஆண்: ஆஹ்ஹா.....

A little space to find your voice.

About Poovizhi Vaasalil

Poovizhi Vaasalil is a song from Dheepam (1977). Performed by K. J. Yesudas, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer