Kanne Karisal Mannu Song Lyrics

Vaigasi Poranthachu·1990

Singer
K. J. Yesudas and Swarnalatha
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

ஆண்: கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

ஆண்: கண்ணீரின் திரைக்குள் கட்டாய சிறைக்குள்
பூட்டி அடைச்சு வச்ச பாசம் இதில்
போட்டு நடத்தி வரும் சோகம் ஓயாத புயலாலே
தூங்காமல் போராடும் அலை மேலே

ஆண்: மனம் தாங்காத சுமையுடன் தள்ளாடி தள்ளாடி
கரைதனை தேடுதோ படகு
இந்தக் கதைக்குத்தான் தெரியல முடிவு

ஆண்: கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

ஆண்: கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

பெண்: ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

ஆண்: ஊத்து மணலெடுத்து உப்புக் கடல் நீரெடுத்து
நேத்து வரக் கட்டி வச்ச கோட்டை
இன்று காத்தடிச்சு கலைஞ்சுதான் போச்சே

ஆண்: ஆத்து நீர் நுரையாச்சே
அவள் சொந்தம் அவமான கதையாச்சே
அட சாத்தி வச்ச வீட்டுக்குள்ளே ஏத்தி வச்ச விளக்காய்
உள்ளத்துக்குள் சூடுபட்ட மலரே
இது ஊரு சனம் தள்ளி வச்ச நிலவே...

ஆண்: கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

ஆண்: கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

A little space to find your voice.

About Kanne Karisal Mannu

Kanne Karisal Mannu is a song from Vaigasi Poranthachu (1990). Performed by K. J. Yesudas, Swarna Latha. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer