Eerakkaathae Song Lyrics

Idam Porul Yaeval·2014

Idam Porul Yaeval movie poster
Singer
Senthildass and Anitha
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

விசில்: ..........................

பெண்: ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து

ஆண்: மலங்காட்டு மயிலே
மச்சம் உள்ள முயலே
முள்ளு மேல துணி காய போடுற

ஆண்: தஞ்சம் வந்து கெடக்கேன்
தப்பி வந்து பொழய்க்கேன்
துன்பத்துக்கு வாக்கபட பாக்குற

பெண்: பாசத்த உள்ள வச்சு
ஒரு பாசாங்கு பண்ணாதீக
மண்ணுக்குள் நூல்கோல் போல
என்ன கண்ணுக்குள் மூடாதீக.....

ஆண்: ஓ மழையில் ஒதுங்க தானே
நான் இரவில் பனியா வந்தேன்
பனிய குடிக்கத்தானே
நீ பகலில் வெயிலா வந்த......

பெண்: ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து

பெண்: செஞ்சு வச்ச கல் ஆனேன்
உன்னால சேல கட்டும் பொண் ஆனேன்
என் சேல அழுக்காக்கவா
உள்கூடு வேர்வை பூக்க வா நீ வா

ஆண்: ஆம்பளைக்கி சேல கட்டி வந்தாக்க
பொம்பளன்னு நம்பனுமா
சொல்லாம வழி பார்த்து போ
கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ

பெண்: அட உசிர உள் வாங்கும் காத்துதான்
என் கூந்தல் போர்வை ஆகுமே

ஆண்: ஆட்டுதோலு என் போர்வை ஆகலாம்
வெள்ளாடு போர்வை ஆகுமா

பெண்: செல்ல கருப்பா என்ன கொழுப்பா
உண்மை சொல்லு......

ஆண்: உன்னி பூச்சி எப்போதும்
காம்போட ஒட்டி கிட்டா போகாது
என் உசிர உரிஞ்சாதடி
என் பொழப்பில் ஈரம் இல்ல போடி

பெண்: செக்கு பட்ட எள் போல
சும்மா நீ நொக்கு பட்டு போகாத
என் பேச்ச நீ கேளையா
என் தோளில் தேமல் பார்த்து போய்யா

ஆண்: ஒரு தலையே இல்லாத பூச்சி நான்
நீ கிரீடம் சூட்ட பாக்குற

பெண்: தன் தலைய மண்னோட மூடுற
தீ கோழி போல ஏய்க்கிற

ஆண்: என்ன மடக்க மார்பில்
இடுக்க பாக்குறியா

ஆண்: ஈரக்காத்தே நீ வீசு
ஏறெடுத்து நீ பேசு
கூட்டுகுள்ள ஓர் கூத்து
மேகம் கொண்டு வான் சாத்து

விசில்: ..........................

A little space to find your voice.

About Eerakkaathae

Eerakkaathae is a song from Idam Porul Yaeval (2014). Performed by Anitha, Senthil Dass. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer