Kurunthogai Song Lyrics

Idam Porul Yaeval·2014

Idam Porul Yaeval movie poster
Singer
V.V. Prassanna and Sonia
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்

பெண்: இன்பத்துபால் சொல்லும்
இளய வேந்தே
பொருட்பாலை எப்போது காட்டுவாய்

பெண்: ஈசன் எழுதிய ஓலைகளில்
அக்கால காதல் உருவாகும்
ரேசன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்

பெண்: நல்ல வேலை செய்த பின்னே
சிறு தாலி செய்து கொண்டுவா

ஆண்: குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்

ஆண்: இன்பத்துபால் கொஞ்சம்
படித்த பின்னே
பொருட்பாலை உன்னோடு யோசிப்பான்

பெண்: ஆஅ.....சதி மோகம் என்னும் மேகம்
இரு கண்ணை மூடுமே
பசி தாகம் வந்து காதை மூட
உண்மை தோணுமே

ஆண்: இது அவ்வையாரின் கேள்வி
என் அதையே சொல்கிறாய்
நான் ஆசை அம்பு வீசும்போது
அழகாய் வைக்கிறாய்

பெண்: இல்லறம் கொள்ள வினைத்தொகையும்
அளபெடையும் உதவாது

ஆண்: சத்தியமடி தமிழ் நமக்கு
உணவளிக்கும் தடை ஏது

பெண்: ஹேய் பொய்யோ
நீ சொல்வது மெய்யோ
நம்பவா நான்......

ஆண்: குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தன்
பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான்

ஆண்: இன்பத்துபால் கொஞ்சம்
படித்த பின்னே
பொருட்பாலை உன்னோடு யோசிப்பான்

ஆண்: ஹேய்ஹே.....
உன் மூளை கொண்டு பார்த்தால்
அது கணிதம் ஆகுமே
நீ நெஞ்சு கொண்டு காணும்போது
நேசம் தோன்றுமே

பெண்: விழி மூடி கொண்டு காண
என் நெஞ்சே போதுமே
நீ மூடி வைத்த உண்மை காண
மூளை வேணுமே....

ஆண்: கணித மேதை ராமானுஜம்
பெத்த பொண்ணு நீ தானா

பெண்: கற்பனை பண்ணும் மகாகவி
கம்பன் மகன் நீ தானா

ஆண்: அம்மே தமிழில் எம்.எ.
நம்பி வா வா.....

பெண்: குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தா
பெருந்தொகை எப்போது ஈட்டுவாய்

பெண்: இன்பத்துபால் சொல்லும்
இளய வேந்தே
பொருட்பாலை எப்போது காட்டுவாய்

A little space to find your voice.

About Kurunthogai

Kurunthogai is a song from Idam Porul Yaeval (2014). Performed by V.V. Prassanna, Sonia. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer