Vaiyambatti Song Lyrics

Idam Porul Yaeval·2014

Idam Porul Yaeval movie poster
Singer
Anthony Daasan and Priyadarshini
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தந்தானேனா தந்தானேனா
தந்தானேனானா தந்தானேனா

ஆண்: வையம்பட்டி... வாழக்குட்டி...
தப்பாட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுனா
மேகங்கள் போடும் ஆலங்கட்டி

குழு: மல மேல ஒழப்பு
பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா
முன்னேறுமா.....ஆஆஆ....

குழு: பணக்கார கரண்டி
மழை எல்லாம் சொரண்டி
வனக்காடு பழுதாச்சு அம்மா
பலகாலமா......ஆஆஆ.....

பெண்: மலைக்கு போய் மொட்ட போடு
மலைக்கே மொட்ட போட வேணா
மலையும் மரமும் நம்ம சாமி
கொண்டாடுங்க.....கூத்தாடுங்க.......

பெண்: தாய் மாமன் காத்து
தாய்பால் ஊத்து
உசுரு பொழைக்க இது போதும்
மும்மாரி கூட மோசம் செஞ்சாலும்
கையே...... எதிர்க்காலம்

ஆண்: தேகத்தில் வலுவுண்டு மானே
இங்க தினையோடு சாப்பாடு தேனே

குழு: மேகத்தின் போர்வைக்கு கீழே
நாங்க காதல் செய்வோம்
களவும் செய்வோம்

ஆண்: புல்லோடு தூங்கும்
பனி துளி சேர்த்து
சூரிய ஒளியை கோர்போமே
சந்தோசம் உண்டு சாதிகள் இல்ல
சமத்துவம் காண்போமே.......

ஆண்: தென் நாட்டு தாகம்
தீர்க்கும் தெய்வம்
மேற்க்கு தொடர்ச்சி மலைதானே...
மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே
வாழ்ந்த மலைதானே

பெண்: பறவைக எச்சம்தான் காடு
எங்க பண்பாட்டில் காடேதான் வீடு

குழு: மரமொன்று மல மேல சாஞ்சா
நாங்க தூக்கம் கெட்டு
துக்கம் கேட்போம்

பெண்: தன் வீட்டு மேல
தீ வைக்கும் மனுசா
நம்மோட காட்ட அழிக்காதே
பேராச புடிச்ச பேய் மனக்காரா
தாய் முலை அறுக்காதே

ஆண்: வையம்பட்டி... வாழ குட்டி...
தப்பாட்டம் ஆடு வேசம் கட்டி
பாட்டு கட்டி நீ ஆடுனா
மேகங்கள் போடும் ஆலங்கட்டி

குழு: மல மேல ஒழப்பு
பள்ளத்தில் பொழப்பு
மல ஜாதி முன்னேறுமா
முன்னேறுமா.....ஆஆஆ....

குழு: பணக்கார கரண்டி
மழை எல்லாம் சொரண்டி
வனக்காடு பழுதாச்சு அம்மா
பலகாலமா......ஆஆஆ.....

A little space to find your voice.

About Vaiyambatti

Vaiyambatti is a song from Idam Porul Yaeval (2014). Performed by Anthony Daasan, Priyadarshini. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer