English Paadinaa Song Lyrics

Thennavan·2003

Thennavan movie poster
Singer
Malgudi Subha
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஏய் இங்கிலீஷ் பாடினா ஹோ
ஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ
ஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ
சந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ

பெண்: எல்லாமே இங்க இசைதானே
இசைக்கு எந்த மொழியும் கிடையாதே
எங்கேயும் இசை பொதுதானே
இசைக்கு எந்த தடையும் போடாதே

பெண்: ஹ இங்கிலீஷ் பாடினா ஹோ
ஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ
ஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ
சந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ

பெண்: எல்லாமே இங்க இசைதானே
இசைக்கு எந்த மொழியும் கிடையாதே
எங்கேயும் இசை பொதுதானே
இசைக்கு எந்த தடையும் போடாதே

பெண்: நான் சொல்வதிங்கு சரிதானே
பூலோகம் எங்கும் இசையின் குரல்தானே
தந்தானேதானே தன்னன்னானே
எப்போதும் இது கிராமத்தின் இசைதானே

பெண்: சிற்பம் செதுக்கும் ஒரு ஓசை
உளிகள் செய்யும் அது இசைதான்
சின்ன குழந்தையின் பாஷை
மொழிகள் தாண்டும் ஒரு இசைதான்

பெண்: சில்வர் தட்டு உருண்டாலே
சமையல் அறையில் அது இசைதான்
சிணுங்கல் சத்தம் இருந்தாலே
படுக்கை அறையில் அது இசைதான்

பெண்: ஆகாயம் மேகம் முட்டிக் கொள்வதால்
அம்மாடி கேட்க்கும் இடியும் இசைதானே
ஏய் சிக்குபுக்கு சத்தம் போட்டுத்தான்
தாலாட்டும் இந்த ரயிலும் இசைதானே ஏய் ஏ

பெண்: இசையை மறந்த ஒரு மனிதன்
மிருகமாகி விட கூடும்
இசையை ரசிக்கும் ஒரு மிருகம்
மனிதனாகி தலையாட்டும்

பெண்: இசையை கேட்டு சில செடிகள்
வளர்ந்ததாக ஒரு செய்தி
இசையை இழந்த ஒரு இதயம்
என்றும் வாழ்க்கையில் கைதி

பெண்: எப்போதும் இந்த இசை ரசிப்போம்
சங்கீதமாக உணவாய் நாம் புசிப்போம்
என்றென்றும் இசையில் வசிப்போம்
பாடல்கள் அதை பதமாய்
நாம் ருசிப்போம்

பெண்: இங்கிலீஷ் பாடினா ஹோ
ஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ
ஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ
சந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ

பெண்: எல்லாமே இங்க இசைதானே
இசைக்கு எந்த மொழியும் கிடையாதே
எங்கேயும் இசை பொதுதானே
இசைக்கு எந்த தடையும் போடாதே

பெண்: ஹ இங்கிலீஷ் பாடினா ஹோ
ஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ
ஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ
சந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ

பெண்: எல்லாமே இங்க இசைதானே
இசைக்கு எந்த மொழியும் கிடையாதே
எங்கேயும் இசை பொதுதானே
இசைக்கு எந்த தடையும் போடாதே

பெண்: நான் சொல்வதிங்கு சரிதானே
பூலோகம் எங்கும் இசையின் குரல்தானே
தந்தானே தானே தன்னன்னானே
எப்போதும் இது கிராமத்தின் இசைதானே

குழு: {ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்} (2)

A little space to find your voice.

About English Paadinaa

English Paadinaa is a song from Thennavan (2003). Performed by Malgudi Subha. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer