Aadhivasi Naane Song Lyrics

Kedi·2006

Kedi movie poster
Movie
Kedi
Singer
Ranjith and Shreya Ghoshal
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆண்: ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

ஆண்: தேவதை உன்னை மீட்க்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை
சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே

ஆண்: ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆண்: ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

ஆண்: கலங்காதே பெண்ணே
உன் கண் பார்வை நானே
கடுங்காவல் மீறி
உன்னை கைசேருவேனே

பெண்: எனக்கென நீ உண்டு
இதயத்தில் பயமில்லை
நெருப்பினில் நின்றாலும்
எனக்கு அது சுடவில்லை

ஆண்: எனது விழி இரண்டில்
விளக்கு திரி எரியும்
உனது பாதைகளில்
உனக்கு வழி தெரியும்

இருவர்: ஜென்மம் மரணம்
எல்லாம் உன்னாலே

ஆண்: ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

பெண்: ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

பெண்: நீ இல்லையென்றால்
என் வாழ்வே தனிமை
மரணத்தை விடவும்
அந்த நொடிதானே கொடுமை

ஆண்: உதிரமே மையாக
சதைகளே ஏடாக
கடிதங்கள் செதுக்கிடுவேன்
நரம்புகள் உளியாக

பெண்: நான்கு யுகங்கள்
இந்த பூமி வாழ்கிறது
அதையும் தாண்டி
நம் காதல் வாழுமே

இருவர்: கூடும் உயிரும்
உன்னை தேடுதே

ஆண்: ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆண்: ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

ஆண்: தேவதை உன்னை மீட்க்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை
சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே

இருவர்: ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

A little space to find your voice.

About Aadhivasi Naane

Aadhivasi Naane is a song from Kedi (2006). Performed by Ranjith, Shreya Ghoshal. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer