Ezhugave Padaigal Ezhugave Song Lyrics

Maaveeran·1986

Maaveeran movie poster
Singer
Malaysia Vasudevan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எழுகவே படைகள் எழுகவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

குழு: ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

குழு: எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே

ஆண்: மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு
குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன் விழுந்தாச்சு
நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே
உடுத்திக் கொள்ள உடையில்லை இடுப்புக்கு மேலே

ஆண்: அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு

குழு: அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு

ஆண்: உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள்
வேளை வந்தது கேள்வி கேளுங்கள்
உழைக்க ஒருவன் பிழைக்க ஒருவன்
என்ற விதியை கொளுத்துங்கள்.....

குழு: எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே

ஆண்: ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

குழு: எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே

ஆண்: ஜாதி பேத வேதாந்தம் இனி இங்கு இல்லை
உறங்கி வாழும் ராஜாங்கம் நிரந்தரம் இல்லை
உனக்கும் எனக்கும் போராட ஒருத்தரும் இல்லை
சார்ந்து வாழும் வாழ்க்கை போல் சாபங்கள் இல்லை

ஆண்: பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்

குழு: பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்

ஆண்: வேட்டையாடவே சாட்டை வாங்குவேன்
தாழ்வு நீங்கவே தலைமை தாங்குவேன்
சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து
பழைய இருட்டை கொளுத்துவேன்........

ஆண்: எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

குழு: ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது

குழு: எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே

A little space to find your voice.

About Ezhugave Padaigal Ezhugave

Ezhugave Padaigal Ezhugave is a song from Maaveeran (1986). Performed by Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer