Gee Priya Song Lyrics

Vaali·1999

Vaali movie poster
Movie
Vaali
Singer
S. P. Balasubramanyam and Swarnalatha
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

எஸ் பி பாலசுப்ரமணியம்

ஆண்: கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

ஆண்: கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

ஆண்: ........................................

பெண்: மண்ணில் இன்பம்
மொத்தமும்
பெண்ணில் தானே உள்ளது
சென்டிமீட்டர் மில்லிமீட்டர்
ஒவ்வொன்றும்
பெண்ணுக்குள் இன்பம்

ஆண்: உண்மையா உண்மையா
உண்மைதானா

பெண்: உண்மைதான் உண்மைதான்
உண்மைதானே

குழு: .............................................

ஆண்: எண்ணங்களும்
எண்ணங்களும்
இருவரின்
கன்னங்களும் கன்னங்களும்
காதலில்
சின்னங்களும் சின்னங்களும்
ஒருமுறை உரசலாம்

பெண்: பன்னீர் மழை
பன்னீர் மழை ஒருதரம்
வெந்நீர் மழை
வெந்நீர் மழை ஒருதரம்
செந்தேன் மழை
செந்தேன் மழை ஒருதரம்
குளிக்கலாம்

ஆண்: பாற்கடல் நீந்தலாம்
பார்க்கலாமா
பால் நிலா விழும் வரை
நீந்தலாமா

பெண்: புயல் புகுந்து ஆடினால்
பூவின் மடல் தாங்குமா
சூரியனின் தாகத்தை
பனித்துளியும் தீர்க்குமா

ஆண்: பனி துளியின்
ஆழத்தில் சூரியனும் மூழ்குமா
கட்டில்மேலே பட்டிமன்றம்
காலையில் தீர்ப்புகள் அம்மா

பெண்: கண்களால் கண்களை
மூடலாமா
காட்டிலே பறவைப்போல்
கூடலாமா

ஆண்: கண்ணில் ஒரு மின்னல் நதி
அழைக்குது
நெஞ்சில் ஒரு காதல் இடி
இடிக்குது
உள்ளெ ஒரு பசிபிக் கடல்
கொதிக்குது தெரியுமா

பெண்: காதல் புயல் ஐயோ
கரை கடக்குது
ஆடைகளும் நானங்களும்
பறக்குது
ஆசை மழை வெள்ளம்
அணை உடைக்குது தெரியுமா

ஆண்: எடுக்கவா தொடுக்கவா
இந்த நேரம்
இருவரும் காணலாம்
இது காதல் பாடம்

பெண்: சேர்த்து வைத்த ஆசையை
செலவழிக்கும் நேரமா
ஆசை தீர்ந்து போனதும்
அன்பு தீர்ந்து போகுமா

ஆண்: தேவை தீர்ந்து போகலாம்
தேடல் தீர்ந்து போகுமா
மேகம் மாறும் மின்னல் மாறும்
வான் நீளம் மாறாது அம்மா

பெண்: கண்களால் கண்களை
மூடலாமா
காட்டிலே பறவைப்போல்
கூடலாமா

ஆண்: கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

ஆண்: கீ பிரியா கீ பிரியா
கீ பிரியா நில்
வாழ்வோடு பேரின்பம்
எங்குண்டு சொல்

ஆண்: .......................................

பெண்: மண்ணில் இன்பம்
மொத்தமும்
பெண்ணில் தானே உள்ளது
சென்டிமீட்டர் மில்லிமீட்டர்
ஒவ்வொன்றும்
பெண்ணுக்குள் இன்பம்

ஆண்: உண்மையா உண்மையா
உண்மைதானா

பெண்: உண்மைதான் உண்மைதான்
உண்மைதானே

A little space to find your voice.

About Gee Priya

Gee Priya is a song from Vaali (1999). Performed by S. P. Balasubramanyam, Swarna Latha. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer