Aathoram Thoppukkulla Song Lyrics

Panchalankuruchi·1996

Singer
Swarnalatha
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்......
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்......

பெண்: கனகாம்பரம் எடுத்து
கையால நீ தொடுத்து
பின்னால வச்சிவிட
ஆசை வச்சேன்.....
மரியாதை இல்லாம
மச்சானே உன்னை பேசி
மாரோட மல்லுக்கட்ட
ஆசை வச்சேன்.....
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

பெண்: மாரளவு தண்ணியில
மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க
மறைஞ்சிருந்து நீயும் பாக்க
ஆசை வச்சேன்...

பெண்: பசுவப் போல மெல்ல வந்து
கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்பு பண்ண வேணுமின்னு
ஆசை வச்சேன்

பெண்: உள்ளூரு சந்தையில
எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித்தர
ஆசை வச்சேன் .....

பெண்: குத்தாத முள்ளு குத்தி
குதிக்காலு வலிக்குதுன்னு
மடி மேல காலைப் போட
ஆசை வச்சேன்.....

பெண்: அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

பெண்: ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்...
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்....

முனங்கல்: .............

பெண்: மேக்காட்டு மூலையில
மேகம் கருக்கையிலே
சுக்குத் தண்ணி வச்சித்தர
ஆசை வச்சேன்....

பெண்: மச்சும் குளிருகிற
மார்கழி மாசத்துல
மச்சானை தொட்டுத் தூங்க
ஆசை வச்சேன்

பெண்: மாமன் கட்டும் வேட்டியில
மஞ்சக் கறை என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல
ஆசை வச்சேன்...

பெண்: ரெட்டிகுளம் ஆசாரிக்கு
பொட்டியில பணம் கொடுத்து
ரெட்டைத் தொட்டில்
செய்யச் சொல்ல ஆசை வச்சேன்

பெண்: அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

பெண்: அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக்கயிறு கட்ட
ஆசை வச்சேன்
நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ணெய் தேய்சுவிட
ஆசை வச்சேன்

பெண்: வெந்நீரை கொதிக்க வச்சு
மச்சானை குளிக்க வச்சு
மாராப்பு நனையத்தானே
ஆசை வச்சேன்....

பெண்: மாந்தோப்பில் கட்டிலிட்டு
மனம் போல தொட்டுத்தொட்டு
மாமன் கூட பேசிடத்தான்
ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

பெண்: ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான்
ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே
ஆசை வச்சேன்.......

A little space to find your voice.

About Aathoram Thoppukkulla

Aathoram Thoppukkulla is a song from Panchalankuruchi (1996). Performed by Swarna Latha. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer