Kana Karunguyile Song Lyrics

Ponmana Selvan·1989

Ponmana Selvan movie poster
Singer
Mano and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: கானக் கருங்குயிலே...
காதல் ஓர் பாவமடி...

பெண்: கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
காதல் கணக்கினிலே
கண்ணீர்தான் லாபமடி

பெண்: ஆசை.......உண்டானது
அதில் வீடு......ரெண்டானது

பெண்: அடி கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி

ஆண்: பூமியில் நாம் பிறந்த
ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி
நாடகம் ஆடுது

ஆண்: வஞ்சியே உன் மனம்
என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை
துன்பமும் வாய்ந்தது

ஆண்: வேதனை சோதனை
யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்றுதான்
அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே
நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம்
வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்

பெண்: கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி

பெண்: ஆசை.......உண்டானது
அதில் வீடு......ரெண்டானது

பெண்: கண்களில் நீர் வழிந்து
கன்னத்தில் ஓடுது
கற்பனை ஆயிரம்தான்
எண்ணத்தில் ஓடுது

பெண்: வானமே இல்லையே
வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா
யாரிடம் கேட்பது

பெண்: பூ மரம் இல்லையே
பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா
யாரிடம் கேட்பது

பெண்: இருந்தால் இனி
உன்னோடு தான்
இல்லையேல் உடல் மண்ணோடுதான்
மாலை இடும் வேளை
வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்

ஆண்: கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி
ஆசை......உண்டானது
அதில் வீடு.....ரெண்டானது

பெண்: அடி கானக் கருங்குயிலே
காதல் ஓர் பாவமடி

ஆண்: காதல் கணக்கினிலே
கண்ணீர்தான் லாபமடி

A little space to find your voice.

About Kana Karunguyile

Kana Karunguyile is a song from Ponmana Selvan (1989). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer