Maaraappu Chaela Song Lyrics

Chinnavar·1992

Chinnavar movie poster
Singer
Mano and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை
மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

பெண்: செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட

ஆண்: மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட

பெண்: தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு

ஆண்: மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

பெண்: மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

ஆண்: ஆனி பொண்ணு ஆளானது
ஆனந்த ராகம் பாடியது

பெண்: தோணிக்குள்ள பூவானது
சொல்லாமத் தானா மூடியது

ஆண்: பாலோடும் ஓட
ஓஹோஹோஹோ
படகோட்டும் வேளை

பெண்: காணாத ஜாடை
ஓஹோஹோஹோ
கண் காட்டும் வேளை

ஆண்: தாலாட்டும் பாட காலம்
தேட யாவும் கை கூட

பெண்: மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

ஆண்: மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

பெண்: செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட

ஆண்: மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட

பெண்: தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு

ஆண்: மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

பெண்: மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

பெண்: மேனிக்குள்ள மின்னல் வெட்டு
மெத்தையில் தீபம் ஏற்றியது

ஆண்: வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டு
வாலிப மனச மாத்தியது

பெண்: தானாக ஊறும்
ஓஹோஹோஹோ
ஆனந்த ஊற்று

ஆண்: தேனாகப் பாயும்
ஓஹோஹோஹோ
மானே உன் பாட்டு

பெண்: பூ பாணம் போடும்
காதல் கூடக் கன்னிப் பெண் தேட

ஆண்: மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

பெண்: மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

ஆண்: செந்தூரப் பூ மேல
தென் பாண்டிக் காத்தாட

பெண்: மந்தாரப் பூந்தோட்டம்
சந்தோஷக் கூத்தாட

ஆண்: தட்டாம தட்டத் தாளம்
கொட்டத் தாலி நீ கட்டு

பெண்: மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

ஆண்: மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

பெண்: மாராப்புச் சேலை
மயிலாடும் சோலை

ஆண்: மச்சானப் பாத்து
வரையாதோ ஓலை

A little space to find your voice.

About Maaraappu Chaela

Maaraappu Chaela is a song from Chinnavar (1992). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer