Kylaa Tamil Song Lyrics

Captain·2022

Captain movie poster
Movie
Captain
Singer
Shreya Ghoshal and Yazin Nizar
A continuous glide, at your pace.
Text size

பெண்: தோகை தோழா
வெண்ணுலகில் வண்ணம் நீதானடா
தோகை தோழா
வேரில் வீழும் வானம் நீதானடா

பெண்: நுழைவே நுழைவே
இல்லாத காட்டில்
இலைகசியொளியாய்
நீ பாய்கிறாய்

பெண்: துளையே துளையே
இல்லாத மூங்கில்
அதிலும் இசையாய்
நீ ஆகிறாய்

பெண்: கதவுகள் இல்லாத
எந்தன் நெஞ்சிலே
கனவென நீ வந்து
நின்றாயடா

குழு: கைலா

ஆண்: கைலா லா லா லா
கைலா கைலா கைலா

குழு: புயலா

ஆண்: ஏய் என்னுள் வீசும்
புயலாய் ஆனாளா

குழு: கைலா

ஆண்: கைலா லா லா லா
கைலா கைலா கைலா

குழு: நைலா

ஆண்: ஏய் என்னுள் பாயும்
நைலாய் ஆனாளா

பெண்: தோகை தோழா
வெண்ணுலகில் வண்ணம் நீதானடா
தோகை தோழா
வேரில் வீழும் வானம் நீதானடா

குழு: கைலா

ஆண்: கைலா லா லா லா
கைலா கைலா கைலா

குழு: புயலா

ஆண்: ஹேய் என்னுள் வீசும்
புயலாய் ஆனாளா

ஆண்: ....................

பெண்: மண்ணை காக்கும் எல்லை வீரா
என்னை கொள்ளை கொண்டாயா
கல்லை போலே கெட்டிக்காரா
முல்லை மோதி வீழ்ந்தாயா

பெண்: ஒருவனை நெருங்கிட
இருதயம் இருப்பதை
முதன்முறை உணருகிறேன்
அறிமுக நொடியினில்
இருபது வருடங்கள்
உனதின்மை உணருகிறேன்

ஆண்: கைலா கைலா குழலாலே
குளிர் மூட்டுவாளா
கைலா கைலா நிழலாலே அழலா
கைலா கைலா விழியாலே
வழி மாற்றுவாளா
எனை தூக்கி போகும் புனலா

பெண்: தோகை தோழா
காரணங்கள் என்னை கேட்டாயடா
தோகை தோழா
பேழைக்குள்ளே நெஞ்சை தந்தேனடா

பெண்: விடையே விடையே இல்லாத கேள்வி
என நீ அறிந்தும் கேட்டாயடா
ஒரு நாள் ஒரு நாள் பேழைக்கு சாவி
தருவேன் திறந்தே நீ பாரடா

பெண்: அதுவரை நீ இந்த காதல் போரிலே
குழம்பத்தில் திண்டாடி கொண்டாடடா

குழு: கைலா

ஆண்: கைலா லா லா லா
கைலா கைலா கைலா

குழு: கைலா

ஆண்: நான் இன்றும் காணா
களமாய் ஆனாளா

குழு: கைலா

ஆண்: கைலா லா லா லா
கைலா கைலா கைலா

குழு: கைலா

பெண்: என் இதழின் மேலே
நகையாய் ஆனாளா

A little space to find your voice.

About Kylaa Tamil

Kylaa Tamil is a song from Captain (2022). Performed by Shreya Ghoshal, Yazin Nizar. Music by D. Imman. Lyrics by Madhan Karky.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer