Yedho Yedho Aasai Song Lyrics

Naan Thaan Siva·2020

Naan Thaan Siva movie poster
Singer
Shreya Ghoshal
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
ஹா......ஆஅ......ஹா.........ஆ.....ஆஅ....
ஹா......ஆஅ......ஆஅ......

பெண்: ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா

பெண்: எத்தனையோ நாளாக
தள்ளி இருந்தேனே
அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே
அண்ணாந்து பாக்கும் ஆகாசம்
அது போலதானே உன் நேசம்....ஹோ

பெண்: ஹோ ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா

பெண்: இருந்திடும் நாள
முழுவது ஆக
உனக்கே நானும் தருவேனடா
எனக்கெனவே நீ இருப்பது பார்த்து
குழந்தை போல அழுதேனடா

பெண்: உன்னைவிட யாருண்டு
என்று நினைத்து
பெண் இவளும் பேய் ஆனேன் பித்து பிடித்து
எதை எதையோ நான் நினைத்தேனடா
அதனையும் ஏனோ மறைத்தேனடா
இதயம் தரவே இனிமேல் இல்லை வெக்கம்

பெண்: ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்

ஆண்: ...............................

பெண்: ம்ம்ம்...... ம்ம்.....
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்....

பெண்: மனசுல நீயும் இருப்பதுனால
பசியே இல்லை என ஆனதே
படுக்கையிலே போய் விழுந்த பின்னாலும்
உறங்கா கண்கள் உன்னை தேடுதே

பெண்: கைகளிலே நீ என்னை அள்ளி எடுத்து
கொஞ்சிடவும் மாட்டாயா முத்தம் கொடுத்து
இருப்பது எல்லாம் தர எண்ணியே
நெருங்குகிறறேனே இவள் உன்னையே
இருந்தும் தயங்கும் இதயம் வெட்டி தள்ள

பெண்: ஏதோ ஏதோ ஆசை
உன்னை பார்த்து பேச நிக்குதடா
பார்த்து பேசும் போதும்
வரும் வார்த்தை ஏனோ திக்குதடா

பெண்: எத்தனையோ நாளாக
தள்ளி இருந்தேனே
அத்தனையும் கை சேர இப்ப கலந்தேனே
அண்ணாந்து பாக்கும் ஆகாசம்
அது போலதானே உன் நேசம்....ஹோ

பெண்: ஏதோ ஏதோ....ம்ம்ம்...
ஆஆஹா ஆஹா நிக்குதடா......
பார்த்து பேசும் போதே
வரும் வார்த்தை திக்குதடா

A little space to find your voice.

About Yedho Yedho Aasai

Yedho Yedho Aasai is a song from Naan Thaan Siva (2020). Performed by Shreya Ghoshal. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer