Oru Poonjolai Song Lyrics

Vaathiyaar Veettu Pillai·1989

Singer
S. P. Balasubrahmamyam and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே.....ஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹே.......ஒரு பொன்மாலை
தோள் சேருதே

பெண்: மலர்களின் முன்னும் பின்னும்
பனித் துளி மின்னும் மின்னும்

ஆண்: பருவங்கள் துள்ளும் துள்ளும்
பழகிட சொல்லும் சொல்லும்
முத்தம்

பெண்: தரும் சத்தம் அதில்

ஆண்: நித்தம் நித்தம்
நெஞ்சம் மயங்குதே

பெண்: ஹே.....ஒரு பூஞ்சோலை
ஆளானதே

ஆண்: ஹே.......ஒரு பொன்மாலை
தோள் சேருதே

குழு: ஹா....ஆஅ....ஆஅ...ஆ
ஹா....ஆஅ....ஆஅ...ஆ
ஹா....ஆஅ....ஆஅ...ஆ

ஆண்: சிங்கார வெண்ணிலா
மண் மீதிலே
சங்கீதம் பாடுதே
உன் கண்ணிலே

பெண்: செந்தாடும் பொன் மயில்
உன் தோளிலே
நின்றாட ஏங்குதே
இந்நாளிலே

ஆண்: காதல் தேனாறு
பாய்ந்தோடும் நேரம்

பெண்: ஆசைத் தேரேறி
ஊர்கோலம் போகும்

ஆண்: அழகிய சித்திரமே
மதன் கலை புத்தகமே
இளமை எழுதும் இனிய கதையை
இரு உடல் அனுதினம்
எழுதட்டுமே

பெண்: ஹே.....ஒரு பூஞ்சோலை
ஆளானதே

ஆண்: ஹே.......ஒரு பொன்மாலை
தோள் சேருதே

குழு: .................

பெண்: ஆகாய மேகமாய்
நான் மாறியே
உன் மீது வெண்பனி
நான் தூவவா

ஆண்: விண்மீனை பூக்களாய்
நான் கிள்ளியே
உன் தோளில் மாலையாய்
நான் போடவா

பெண்: கண்ணில் காணாத
இன்பங்கள் யாவும்
மண்ணில் காண்பேனே
உன்னாலே நானும்

பெண்: கரும்பினில் வில்லெடுத்து
அரும்பினில் அம்பெடுத்து
உருவம் இழந்த
ஒருவன் எனது
உருகிடும் இதயத்தை
துளைப்பதும் ஏன்

ஆண்: ஹே.....ஒரு பூஞ்சோலை
ஆளானதே
ஹே.......ஒரு பொன்மாலை
தோள் சேருதே

குழு: ஹா....ஆஅ....ஆஅ...ஆ
ஹா....ஆஅ....ஆஅ...ஆ
ஹா....ஆஅ....ஆஅ...ஆ

A little space to find your voice.

About Oru Poonjolai

Oru Poonjolai is a song from Vaathiyaar Veettu Pillai (1989). Performed by S. P. Balasubrahmamyam, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer