Nee Moginiya Song Lyrics

Thirukkalyanam·1978

Singer
Malaysia Vasudevan and L. R. Eswari
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
ராதாவா சீதாவா யாரம்மா நீயம்மா
உன்ன பார்த்திருக்கிற என் மனசுக்கு
பதில் ஒண்ணு சொல்லு

பெண்: அட வா ஆணழகா
கொட மொளகா மூக்கழகா
கோழி முட்டை கண்ணா வா
ஹா இங்கே வா இப்படி வா
ஹா உனக்கு பிடிச்சிருக்கிற பைத்தியத்துக்கு
வைத்தியம் இருக்கு

ஆண்: நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா

ஆண்: ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன்
கண்ணு என் பொண்ணு

பெண்: ஓஹோ

ஆண்: அது முதலாக தெருத் தெருவாக
வந்தேன் நான் நின்னு

பெண்: ஆஹா

ஆண்: ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன்
கண்ணு என் பொண்ணு

பெண்: ஆஹா

ஆண்: அது முதலாக தெருத் தெருவாக
வந்தேன் நான் நின்னு

பெண்: ஹஹஹா

ஆண்: தேடித் தேடி நான் அலைஞ்சேன்
தினம் தினமும் நான் துடிச்சேன்
கடைசியிலே புடிச்சுப்புட்டேன் உன்னை

பெண்: ஓஹோ ஆணழகா
கொட மொளகா மூக்கழகா ஹா

பெண்: நெஜமாதானா நெனச்சது என்னை
தானா அது நானா
நம்பிடுவேனா நடிப்பிதுதானா
போனாயே வீணா

பெண்: தெருத் தெருவா பொண்ணிருக்கு
தெருப் பொறுக்கும் கண்ணிருக்கு
தலையிலதான் மண்ணிருக்கு போய்யா

ஆண்: நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா

ஆண்: மனம் புரியாம எடந் தெரியாம
மானே பேசாதே

பெண்: ஆஹா

ஆண்: உயிரே நீதான் நீயில்லையின்னா
பாரேன் இப்ப பாரேன்

பெண்: அவ்வளவு முடிவெதற்கு
எனக்கும் கூட மனசிருக்கு
ஆசையோடு காத்திருக்கேன் வாங்க......

ஆண்: நீ வாடியம்மா

பெண்: ஆஹா

ஆண்: நான் வந்தேன் தேடியம்மா

பெண்: நாள் ஒண்ணு சொல்லய்யா
மாப்பிள்ளை நீதானைய்யா
வந்து தாலிக்கயிறு நீ முடிக்கிற
நாள் நெருங்குதய்யா

ஆண்: நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ஹா......

A little space to find your voice.

About Nee Moginiya

Nee Moginiya is a song from Thirukkalyanam (1978). Performed by Malaysia Vasudevan, L. R. Eswari. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer