Thangachi Song Lyrics

Meyaadha Maan·2017

Meyaadha Maan movie poster
Singer
Santhosh Narayanan and Anthony Daasan
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ...........................................

ஆண்: {அனபெல் பேயா வாரா
அன்பில் குட்டி தாயா வாரா} (2)
அண்ணண் காச ஆட்டைய போட்டு
பியூட்டி பார்லர் போயி வாரா

ஆண்: மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு
மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு

ஆண்: {அப்பன் கிட்ட வத்தி வைப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா} (2)
சேனல நீ மாத்தி பாரு
கழுத்து மேல கத்தி வைப்பா

ஆண்: ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சி தான் கண்ணு
ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சி தான் கண்ணு

ஆண்: {வேல சொன்னா கேட்க மாட்டா
மனுஷனாவே மதிக்க மாட்டா} (2)
செய்யலைன்னா செத்தடினா
போடா கூந்தலுனு போயிடுவா

ஆண்: கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா

ஆண்: ரகசியம் சொல்லி வெச்சா
பக்குவமா மூடிடுவா
எப் எம்-ல ஏத்தி விட்டு
எஸ்கேப் ஆயி ஓடிடுவா
கோல பொடி மூஞ்சில கொட்டி
சுத்தி சுத்தி ஆடிடுவா

ஆண்: ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும்
ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும்

ஆண்: {குப்புற நான் விழுந்துபுட்டா
தூக்கி விட நெனச்சிருப்பா} (2)
ரெண்டுத்துக்கும் நடுவுல அவ
அரைமணி நேரம் சிரிச்சிருப்பா

ஆண்: ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறப்பு
ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறப்பு

ஆண்: {காதலிச்சா புடிச்சிடுவா
காயம் பட்டா துடிச்சிடுவா} (2)
என்னை என்னி கண்ணீர் விட்டு
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா

ஆண்: வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்
வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்

குழு: .......................................

ஆண்: {வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல} (2)
கணவனே வந்தாலும் அவ
என்ன விட்டு கொடுத்ததில்ல

ஆண்: நான் தான் அவ வேலி
வம்பு பண்ணா அவன் காலி
நான் தான் அவ வேலி
வம்பு பண்ணா அவன் காலி

ஆண்: அவ இல்லாம ....
{அவ இல்லாம நான் இல்ல
நா இல்லாம அவளும் இல்ல} (2)
ஆனா இத என்னைக்குமே
நாங்க வெளிய சொன்னதில்ல

ஆண்: தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு
தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு

குழு: ................................................

ஆண்: தங்கச்சி ....தங்கச்சி ...
தங்கச்சி ..........

A little space to find your voice.

About Thangachi

Thangachi is a song from Meyaadha Maan (2017). Performed by Santhosh Narayanan, Anthony Daasan. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer