Theipirai Song Lyrics

Jagame Thandhiram·2020

Jagame Thandhiram movie poster
Singer
Meenakshi Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ

பெண்: தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை

பெண்: என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே

பெண்: கையிருந்தும் உதவவில்லை
கண்ணால பாத்திருந்தேன்
எந்த நாடு போறீகளோ
எப்படி போறீகளோ எப்படி போறீகளோ

பெண்: அந்த நாடு எப்படியோ
அந்த மக்கா எப்படியோ
வரவேற்று ஏற்பாரோ
முகஞ்சுளித்து வெறுப்போரா..
முகஞ்சுளிச்சு வெறுப்போரா..
முகஞ்சுளிச்சு வெறுப்போரா...

பெண் & குழு: ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ...(4)

பெண்: எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ

பெண்: எப்போ நாம சேருவமோ
எப்படித்தான் சேருவமோ
அல்லாடும் என் உசுரும்
அதுவரையும் தங்கிடுமோ

பெண்: தாயிருக்க பிள்ளையழ
போர்க்களமும் செதறடிக்க
கை பெசஞ்சு தாயும் நிக்க
பிள்ளை இப்ப ஏதிலியாம்

பெண்: தேசமெங்கும் அலங்கோலம்
தாய்மனசு கலங்குதய்யா
பூமழைய பாத்த பூமி
குண்டு மழை பாக்குதய்யா

பெண்: தேய்பிறையை பெத்தெடுத்தே
கண்போல காத்திருந்தேன்
கத்திமுனை சூழ்நிலையில்
காப்பாத்த வழியுமில்லை
காப்பாத்த வழியுமில்லை

பெண்: என்னை விட்டு போறியா
என் உயிர்துளியே உறவினமே
கண்ணெதிரே கலங்குறியே
கதறித்தான் நிக்குறியே...ஆ...

பெண்: கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க

பெண்: கோலமெல்லாம்
நாளை மாறி போகுமய்யா
காலம் வரும்
நம்பிக்கையா போயி வாங்க

பெண்: மீண்டு வந்து வாழ்ந்திடலாம்
போய் வாங்க
தாய்நாடும் காத்திருக்கு
போய் வாங்க

பெண்: ஒரு கதவு மூடுச்சின்னா
மறு கதவிருக்கு
எம்புள்ள வாழ இந்த
பூமியிலே இடமிருக்கு

குழு: தேய்பிறையை பெத்தெடுத்தே... (6)

பெண் & குழு: ஹோ ஹோ ஒ ஹோ ஹோ ஓ ஹோ... (6)

A little space to find your voice.

About Theipirai

Theipirai is a song from Jagame Thandhiram (2020). Performed by Meenakshi Ilayaraja. Music by Santhosh Narayanan. Lyrics by Madurai Babaraj.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer