Vanna Vanna Poove Song Lyrics

Poottaatha Poottukkal·1980

A continuous glide, at your pace.
Text size

பெண்: ...........................................

பெண்: வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே

பெண்: வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே

பெண்: சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள்
மஞ்சளின் திருநாள்......நிலவோ.........
அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய
பெண்மையின் நாணம்......சிலையோ........
ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும்
குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட
என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே
இது காலம் செய்த பிணைப்பு

பெண்: வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே

பெண்: ..........................................

பெண்: மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள்
சேர்ந்தனர் மனதால் உறவில்........
கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம்
வளர்ந்தன வருடம் கனவோ........
பல நாள் உறவு பலன் வேண்டுமே
மழலை விரும்பும் மனம் பாரம்மா
என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண
எதிர்காலம் தேடி சென்றாள்

பெண்: வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
செங்கனி பருவம் இளமொட்டு உருவம்
மிதக்கும் இனிய கனவே

பெண்: வண்ண வண்ண வண்ண
பூஞ்சோலையில் பூப்போலவே
லலால லா லலால லா லாலால லா லலால லா

A little space to find your voice.

About Vanna Vanna Poove

Vanna Vanna Poove is a song from Poottaatha Poottukkal (1980). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer