Aadaiyil Aadum Song Lyrics

Raja Rishi·1985

Raja Rishi movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓம் நம சிவாயா......(3)

ஆண்: ஓம் நம சிவாயா.....(10)

பெண்: ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே
மஞ்சம் தேடுமே

பெண்: ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்

பெண்: குக்கு குகு கூ கூ கூ
என்று குயில் கூவாதோ
சொர்க சுக லோகத்தில் ராகம் வருமே
தத்த தத தா தா தா
நித்தம் உனை நீ தா தா
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே

பெண்: உந்தன் அருகே வந்து தழுவும்
இன்ப நிலையம்
எந்தன் இடைதான் சொர்கபுரியே என்று புரியும்
பட்டுத் துகில் இது கலைந்தாடி வர
ஆசை சிறகினை விரிக்கின்றதே
தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற
தோகை இள மனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி
குலுங்கிட நடமிடும் அபினய அழகு

பெண்: ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே

பெண்: ஆடையில் ஆடும் பொன் மணிகள்

ஆண்: ஓம் நம சிவாயா.....(12)

பெண்: என் உடல் இது பொன் நிற அரவிந்தம்
ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்

ஆண்: ஓம் நம சிவாயா.....

பெண்: எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம்
நித்தமும் அதில் முத்திரை இடலாம்

ஆண்: ஓம் நம சிவாயா.....

பெண்: அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள்
ஆயிரம் கலை கூறிட வருமே

ஆண்: ஓம் நம சிவாயா.....

பெண்: அந்தியில் வரும் இந்திர தனுசின்று
பார்த்தவர் விழி பூத்திட வருமே

ஆண்: ஓம் நம சிவாயா.....

பெண்: மறை பயிலும் தவ முனியே
கலை பயில்வோம் வா
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா
மாமுனி என வாழுவதா ஞானம்

ஆண்: ஓம் நம சிவாயா.....

பெண்: காமனின் கலை தேறுவதே ஞானம்

ஆண்: ஓம் நம சிவாயா.....

பெண்: நான்மறைகளை ஓதுவதா இன்பம்

ஆண்: ஓம் நம சிவாயா.....

பெண்: நான்மறைவினில் கூடுவதே இன்பம்

ஆண்: ஓம் நம சிவாயா.....

பெண்: மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில்
கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா...

ஆண்: ஓம் நம சிவாயா.....(3)

பெண்: இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா...

ஆண்: ஓம் நம சிவாயா.....(3)

பெண்: தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா...

ஆண்: ஓம் நம சிவாயா.....(3)

A little space to find your voice.

About Aadaiyil Aadum

Aadaiyil Aadum is a song from Raja Rishi (1985). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer