Aarum Athu Aalam Illai Song Lyrics

Muthal Vasantham·1986

Muthal Vasantham movie poster
Singer
Ilayaraja
Lyricist
Muthulingam
A continuous glide, at your pace.
Text size

குழு: ம்ம்ம் ...ம்ம்..ம்ம்..ம்ம்ம்...
ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...

ஆண்: ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆண்: ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆண்: அடி அம்மாடி
அதன் ஆழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி
அத பார்த்த பேர கூறு நீ

ஆண்: ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆண்: மாடி வீடு கன்னி பொண்ணு
மனசுகுள்ள ரெண்டு கண்ணு
ஏழை கண்ண ஏங்க விட்டு
இன்னும் ஒண்ணு தேடுதம்மா

ஆண்: கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு

ஆண்: நேசம் அந்த பாசம்
அது எல்லாம் வெளிவேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே

குழு: ம்ம்ம்..ம்ம்..ம்ம்ம் ..(5)

ஆண்: ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆண்: தண்ணியில கோலம் போடு
ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு

ஆண்: ஆண்டவன கூட்டி வந்து
அவனை அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் அய்யா
ஆச வச்ச கிடைக்கும் அய்யா

ஆண்: ஆனா கிடைக்காது
நீ ஆச வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

ஆண்: ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

A little space to find your voice.

About Aarum Athu Aalam Illai

Aarum Athu Aalam Illai is a song from Muthal Vasantham (1986). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Muthulingam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer