Chinna Chinna Panithuli Song Lyrics

Panchalankuruchi·1996

Singer
K. S. Chithra
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: சின்ன சின்ன பனித்துளி
சிந்தி விழும் சோலைக்குள்ளே
என்ன என்ன கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே

பெண்: சின்ன சின்ன பனித்துளி
சிந்தி விழும் சோலைக்குள்ளே
என்ன என்ன கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே

பெண்: கேட்டுக் கொள்ள தோது இல்ல
கேட்டுச் சொல்ல நாதியில்ல
என்னை என்ன கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே

பெண்: சின்ன சின்ன பனித்துளி
சிந்தி விழும் சோலைக்குள்ளே
என்னை அவர் கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே

பெண்: கட்டி வைக்க கார்க்குழலை கேட்பாரோ
என் கன்னக்குழி வேணுமின்னு கேட்பாரோ
மச்சமுள்ள இடம் மட்டும் கேட்பாரோ
நான் மஞ்சள் பூசும் பாகங்கள கேட்பாரோ

பெண்: கட்டி முத்தமிட்டு கொள்ள
கையில் வைத்து கட்டிக்கொள்ள
கால் கொலுச கேட்பாரோ
என் கழுத்தழகும் மாரழகும் கண்ட சேதி
கேட்டுக் கொள்ள கருகமணி கேட்பாரோ
கெறக்கம் அடங்கலையே
அதக் கேட்டுத்தான் சொல்லு அணிலே

பெண்: பாவாடையின் நூலு ஒண்ணு கேட்பாரோ
என் பாதம் பட்ட ஓடை மண்ணை கேட்பாரோ
கண்ணுக்குள்ள கப்பல் விட கேட்பாரோ
என்ன கம்மங்காடு வாறியான்னு கேட்பாரோ

பெண்: ஒரு கொடம் தண்ணிக் கொண்டு
ஊரு வழிப் போகையில
ரெண்டு கொடம் கேட்பாரோ
பொட்டு வச்ச எடம் விட்டு
மத்த எடம் அத்தனையும்
தொட்டுவிட கேட்பாரோ
சிறுக்கி ஓறங்கலையே அத
சீக்கிரம் சொல்லு அணிலே

பெண்: சின்ன சின்ன பனித்துளி
சிந்தி விழும் சோலைக்குள்ளே
என்ன என்ன கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே

பெண்: கேட்டுக் கொள்ள தோது இல்ல
கேட்டுச் சொல்ல நாதியில்ல
என்னை அவர் கேட்பாரோ
அணிலே சொல்லு அணிலே

A little space to find your voice.

About Chinna Chinna Panithuli

Chinna Chinna Panithuli is a song from Panchalankuruchi (1996). Performed by K. S. Chithra. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer