Adi Netriravu Song Lyrics

Innisai Mazhai·1992

Innisai Mazhai movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

பெண்: இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

ஆண்: தித்தித்தது நெஞ்சம்

பெண்: சம்சம் சம்

ஆண்: தென்பட்டது கொஞ்சம்

பெண்: சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ

ஆண்: அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

பெண்: இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

ஆண்: பத்து விரல் பட்டால் என்ன
முத்த மழை இட்டால் என்ன

பெண்: ஆஹா ஆஹா ஆஹா
பொன்னே மணியே

ஆண்: பட்டு உடல் சுட்டால் என்ன
வெட்கம் அதை விட்டால் என்ன

பெண்: ஆஹா ஆஹா ஆஹா
அன்பே அமுதே

ஆண்: கங்கை நதி நீராட
கண்ணன் வரத்தான்

பெண்: மங்கை மடி சீராட
மன்னன் வரத்தான்

ஆண்: ஒரு புதிய மயக்கம்
உனக்கும் எனக்கும்
கூடி வரும் நாள் இது நேற்றிரவு...

ஆண்: அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

பெண்: இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

ஆண்: தித்தித்தது நெஞ்சம்

பெண்: சம்சம் சம்

ஆண்: தென்பட்டது கொஞ்சம்

பெண்: சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ

ஆண்: அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

பெண்: இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

பெண்: அந்தப்புர சந்தோஷங்கள்
அர்த்த ஜாம சங்கீதங்கள்

ஆண்: ஆஹா ஓஹோ ஏஹே
உன்னால் வந்ததே

பெண்: தென்பொதிகைச் சாரல் என
சின்ன மணித் தூரல் என

ஆண்: ம்ஹும் ஆஹா ஓஹோ
இன்பம் தந்ததே

பெண்: முன் பின் மனம் காணாத அன்பின் விளக்கம்

ஆண்: முற்றுப் புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்

பெண்: இனி முதுமை வரையில் நமது உறவு
ஓடி வரக் கூடுமே

ஆண்: நேற்றிரவு...
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ

பெண்: இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

ஆண்: தித்தித்தது நெஞ்சம்

பெண்: சம்சம் சம்

ஆண்: தென்பட்டது கொஞ்சம்

பெண்: சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ

ஆண்: அடி நேற்றிரவு நடந்ததென்ன
ஆஹ ஹஹா ஹா

பெண்: இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ

A little space to find your voice.

About Adi Netriravu

Adi Netriravu is a song from Innisai Mazhai (1992). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer