Vaa Vaa Mannava Song Lyrics

Innisai Mazhai·1992

Innisai Mazhai movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: வா வா... ஆ... மன்னவா... ஆ...
வா வா... ஆ... மன்னவா... ஆ...

பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா
வா வா மன்னவா வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

பெண்: வா வா மன்னவா
வா வா... ஆ... மன்னவா... ஆ...

பெண்: ஓ... உறவை ஒரு சிலுவையப் போலே
உயிரில் தினம் சுமப்பதனாலே
இரவில் விழி துயில்வதும் இல்லை
இசையை மனம் பயில்வதும் இல்லை

பெண்: வீணையும் விரலகளும் விலகியே வாழுமா
விலகினால் தந்திகள் தேன் இசை வார்க்குமா
விழியில் வழி வழிந்தது கண்ணீர்
வேரில் வந்து விழுந்தது வெந்நீர்
உடலில் ஒரு உணர்ச்சியும் இல்லை
மனதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை

பெண்: ஆடலும் பாடலும் நீ தரும் சீதனம்
தென்றல் நீ இல்லையேல் பூக்குமா பூ வனம்
வாவா வாவா அன்பே...

ஆண்: வா வா... கண்மணி...
வா வா... ஆ... கண்மணி...

ஆண்: வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா கண்மணி வாசல் தேடி வா
வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

ஆண்: வா வா கண்மணி வாசல் தேடி வா
வா வா கண்மணி....

ஆண்: ஆ... ஆ... மறந்து விடு பிரிவென்னும் சொல்லை
பிரிவு இந்தப் பிறவியில் இல்லை
உறவில் இங்கு நமக்கொரு எல்லை
வகுத்து வைக்க ஒருவனும் இல்லை

பெண்: ஆணைகள் இடுவதால்
அலை கடல் அடங்குமா

ஆண்: குடைகளை விரிப்பதால்
அடை மழை நடுங்குமா

பெண்: தனலில் வைத்த மெழுகென இங்கு
தவித்த மனம் பிழைத்தது இன்று
தலைவன் உந்தன் வருகையைக் கண்டு
தனிமை இங்கு விடை பெறும் இன்று

ஆண்: காதலின் காவியம் காலத்தை வெல்வது

பெண்: மேனியை நிழல் தொட
யார் என்ன சொல்வது
வாவா வாவா அன்பே...

ஆண்: வா வா கண்மணி வாசல் தேடி வா

பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா

ஆண்: வானம் இல்லையேல் வாடும் வெண்ணிலா

பெண்: வா வா மன்னவா வாசல் தேடி வா
வா வா மன்னவா

A little space to find your voice.

About Vaa Vaa Mannava

Vaa Vaa Mannava is a song from Innisai Mazhai (1992). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer