Dhoori Dhoori Manathil Oru Dhoori Song Lyrics

Innisai Mazhai·1992

Innisai Mazhai movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Shobha Chandrasekar
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

பெண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி
புதுத் தாளம் புது ராகம்
அதில் சேரும் அரங்கேறும்
வஞ்சிப் பூ உன் நெஞ்சத்தில் கொஞ்சும்

ஆண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி

பெண்: தூது போ என்று
நான் மேகத்தை வேண்டினேன்
தூக்கமே இன்றியே நாள் எல்லாம் வாடினேன்

ஆண்: நாளொரு பாதையில் நாட்களை ஓட்டினேன்
பூவை உன் ஜாடையில் பாதையை மாற்றினேன்

பெண்: மாலைக் கருக்கலில் சோலை அழைத்ததும்
பூந்தென்றல் வாராதோ

ஆண்: தோகை துடிக்கையில் தேவன் அழைத்ததும்
தோள் வந்து சேராதோ

ஆண்: புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

பெண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி
லாலி லாலி விழியில் ஒரு லாலி

ஆண்: புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

ஆண்: தேர் வரும் என்றுதான்
தெய்வமும் நின்றதோ
ஊர்வலம் போய் வர நாள் ஒன்று வந்ததோ

பெண்: நாயகி என் மனம் நாயகன் ஆலயம்
ஆயிரம் பூஜைகள் காலையும் மாலையும்

ஆண்: ஆவல் கலந்திடும் காவல் கடந்திடும்
யார் என்ன சொன்னாலும்

பெண்: தேவன் விதிப் படி காதல் வளர்ந்தது
தேன் சிந்தும் எந்நாளும்

ஆண்: புது ராகம் அரங்கேறும்
வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

ஆண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி

பெண்: லாலி லாலி விழியில் ஒரு லாலி

ஆண்: புதுத் தாளம் புது ராகம்

பெண்: அதில் சேரும் அரங்கேறும்

ஆண்: வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்

பெண்: தூரி தூரி மனதில் ஒரு தூரி

ஆண்: லாலி லாலி விழியில் ஒரு லாலி

A little space to find your voice.

About Dhoori Dhoori Manathil Oru Dhoori

Dhoori Dhoori Manathil Oru Dhoori is a song from Innisai Mazhai (1992). Performed by S.P. Balasubrahmanyam, Shobha Chandrasekar. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer