Therke Pirandha Song Lyrics

Innisai Mazhai·1992

Innisai Mazhai movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண்: தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண்: இங்கு வீசி வரும் தென்றல் காற்றே
எங்கள் பாட்டெடுத்து செல்லு காற்றே
எங்கள் பாட்டெடுத்து சென்று நீயும்
அந்தப் பைங்கிளிக்கு சொல்லு காற்றே

குழு: தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண்: ஊர் ஊராக பயணம் புரிந்தோமே
ஒன்றாகப் பழகிக் கிடந்தோமே
கை கோர்த்து பல நாள் நடந்தோமே ஹோய்

ஆண்: சங்கீத மழையை பொழிந்தோமே
சந்தோஷக் கடலில் மிதந்தோமே
அன்பென்னும் கவிதை புனைந்தோமே ஹா

ஆண்: இடையில் புகுந்து திரையை விரித்தான் யாரடி
இருக்கும் இடத்தை இசையால் விளக்கிக் கூறடி

ஆண்: நாங்கள் கொண்டு வந்த சின்னப் பூவே

ஆண்: நாங்கள் தங்குகின்ற முல்லைத் தீவே

ஆண்: உன்னைக் கண்டு கொள்ள இந்தப் பாட்டு
உந்தன் பொன் முகத்தை இங்கு காட்டு

குழு: தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

ஆண்: தெம்மாங்கு படிப்போம் இசை போட்டு
தென்பாண்டிக் குயில்தான் இதைக் கேட்டு
சொல்லாதோ நமக்கோர் எதிர் பாட்டு ஹா

ஆண்: கண்ணீரின் விளக்கம் தெரியாதோ
உண்டான கலக்கம் புரியாதோ
கொண்டாடும் வருத்தம் அறியாதோ

ஆண்: நெடு நாள் உறவு
ஒரு நாள் பிரிவைத் தாங்குமா
விழிதான் இமையை
வழிதான் தவறி நீங்குமா

ஆண்: நாம நித்தம் நித்தம் சொல்லும் பாட்டு
பல நெஞ்சம் அதை அள்ளும் பாட்டு
அடி பெண்ணரசி நீயும் கேட்டு
உந்தன் வண்ண முகம் இங்கு காட்டு

குழு: தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

குழு: இங்கு வீசி வரும் தென்றல் காற்றே
எங்கள் பாட்டெடுத்து செல்லு காற்றே
எங்கள் பாட்டெடுத்து சென்று நீயும்
அந்தப் பைங்கிளிக்கு சொல்லு காற்றே

குழு: தெற்கே பிறந்த கிளி
செக்கச் சிவந்த கிளி
திக்கு திசை மாறிப் போச்சோ
பக்கம் இருந்த கிளி
பாட்டு படிச்ச கிளி
தன்னம் தனி என்று ஆச்சோ

A little space to find your voice.

About Therke Pirandha

Therke Pirandha is a song from Innisai Mazhai (1992). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer