Akka Song Lyrics

Brother·2024

Brother movie poster
Movie
Brother
Singer
Stephen Zechariah and Bhargavi Sridhar
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ....ஆ...ஆ....ஆ.....ஆ...
கண்ணா நீ கண்ணுறங்கு
ஆஅ....ஆ...ஆ....ஆ.....ஆ...
தாலாட்ட நீ உறங்கு

ஆண்: ஆரோ ஆராரோ
அக்கா உன் பேரோ
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ
பாலை மண் மீது பாயும் பன்னீரோ
எனக்காகத்தான் இங்கு வந்தாயோ

ஆண்: அடங்காத என்னை
அடைக்காத்த தொன்னை
சிதறாமல் ஆளாக்கினாயே....

ஆண்: சில ஆண்டு முன்னே
பிறந்தாலும் பெண்ணே
உறவென்று சொன்னால் நீ தாயே

ஆண்: ஆரோ ஆராரோ
அக்கா உன் பேரோ
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ
பாலை மண் மீது பாயும் பன்னீரோ
எனக்காகத்தான் இங்கு வந்தாயோ

பெண்: ஆஅ....ஆ...ஆ....ஆ.....ஆ...
கண்ணா நீ கண்ணுறங்கு
ஆஅ....ஆ...ஆ....ஆ.....ஆ...
தாலாட்ட நீ உறங்கு

ஆண்: முதல் அடி எடுத்தேன் வைக்க
தளிர் நடை தடுத்தே பொய்க்க
நிலத்தை அடித்து நீ கடிந்தாய்

ஆண்: விழி என எனை நீ வரித்தாய்
இமைகளை குடையாய் விரித்தாய்
உறக்கம் தொலைத்தெனை வளர்த்தாய்

ஆண்: அலை போல நில்லாமல்
ஆடிய உன் தோள்கள்
ஆனந்த ஊஞ்சல்களாகும்

ஆண்: மறவாத என் நெஞ்சம்
மல்லிகை பூ கொஞ்சும்
வாசத்தை தேடும்

ஆண்: ஆரோ ஆராரோ
அக்கா உன் பேரோ
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ

பெண் & ஆண்: பாலை மண் மீது பாயும் பன்னீரோ

ஆண்: எனக்காகத்தான் இங்கு வந்தாயோ

ஆண்: ஓஓ....தவறுகள் தெரிந்தே செய்தும்
எனக்கென இருந்தாய் என்றும்
நீதான் தவம் வரம் இரண்டும்

ஆண்: அடி உதை கிடைக்கும் என்றால்
இழுத்தென்னை மறைப்பாய் பின்னால்
கவசம் நிரந்தரம் எனக்கும்

ஆண்: புயல் காற்றில் நான் நின்றால்
பூந்தென்றல் நீ ஆவாய்
புன்னகையால் என்னை வெல்வாய்

ஆண்: நதி வெள்ளம் நான் என்றால்
நாணல்கள் நீ ஆவாய்
நான் பொங்கி போகாமல் காப்பாய்

ஆண்: அம்மா கண்ணம்மா

பெண்: கண்ணம்மா

ஆண்: கண்ணே நீயம்மா

பெண்: நீயம்மா

ஆண்: உனையன்றி எனக்கிங்கே யாரம்மா

ஆண்: பெண்ணில் பொன்னம்மா

பெண்: பொன்னம்மா

ஆண்: உள்ளம் பூவம்மா

பெண்: பூவம்மா

ஆண்: நடமாடும் மண் தெய்வம் நீயம்மா

ஆண்: மடி மீது என்னை
புலராத ஏந்தி
மகன் போல ஆளாக்கி தந்தாய்

ஆண்: வளர்ந்தாலும் என்னை
சிறுபிள்ளை என்னும்
கதை சொல்லி காப்பாற்றி வந்தாய்

பெண்: கண்ணம்மா நீயம்மா
ஆராரிராரோ ம்ம்ம்
பொன்னம்மா பூவம்மா
தாலாலே தாலாலேலோ

A little space to find your voice.

About Akka

Akka is a song from Brother (2024). Performed by Stephen Zechariah, Bhargavi Sridhar. Music by Harris Jayaraj. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer