Amma Badhil Song Lyrics

Porantha Veeda Puguntha Veeda·1993

Porantha Veeda Puguntha Veeda movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி...

பெண்: வாசனை பன்னீரில் நித்தமே நீராடி
வேளைக்கொரு அலங்காரம் காண்பதென்ன
வேதனை கண்ணீரில் என்னை நீ நீராட்டி
தூரம் நின்று வாய் மூடி பார்ப்பதென்ன

பெண்: திருவடியில் சரணம் சரணம்
என துதி புரியும் பொழுது
அலை அலையா துயரம் பெருக
என வதைப்பதுவோ அழகு
விதியா வினையா உனைக் கேட்டேன் தாயே

பெண்: அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

பெண்: தேவியே நீ கூட தக்ஷனின் மகளாக
மாலையிட்ட சிவனோடு வாழ்ந்திருந்தாய்
தாயென உனைக் காத்த
தந்தையின் மனைத் தேடி
நாயகன் சொல் கேளாமல் ஓடி வந்தாய்

பெண்: புகுந்த இடம் நலமும் வளமும் பெற
அனுதினமும் உழைத்தேன்
பிறந்த இடம் தவிக்கும் தருணம்
கொண்ட உடன் பிறப்பை அணைத்தேன்
சரியோ தவறோ உனைக் கேட்டேன் தாயே

பெண்: அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி
தீராத துயர் கொண்ட பெண் ஜென்மமா
பெண் என்று பிறந்தாலே பெரும் பாவமா
அம்மா பதில் சொல்லடி இங்கே எதிர் நில்லடி

A little space to find your voice.

About Amma Badhil

Amma Badhil is a song from Porantha Veeda Puguntha Veeda (1993). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer