Andhi Varum Neram Song Lyrics

Mundhanai Mudichu·1983

Mundhanai Mudichu movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

பெண்: அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்

பெண்: மந்திரங்கள் ஒலித்தது...
மங்கை உடல் சிலிர்த்தது...
சங்கமத்தின் சுகம் நினைத்து....

குழு: ஆஅ.....ஆஆ.....ஆஅ....

ஆண்: சிந்து கவி பிறந்தது...
சிந்தனைகள் பறந்தது
சந்தனத்து உடல் அணைத்து...

பெண்: இதழில் ஒரு ஒலை...
எழுதும் இந்த வேளை...

ஆண்: இளமை என்னும் சோலை...
முழுதும் இன்ப லீலை...ஹான்

பெண்: நீராடுது மாந்தளிர் தேகம்
போராடுது காதலின் வேகம்
என்றென்றும் ஆனந்த யோகம்

ஆண்: அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

குழு: ................................

ஆண்: இன்பத்துக்கு முகவுரை
என்றுமில்லை முடிவுரை
நீயிருக்க ஏது குறை...

குழு: ஆஅ.....ஆஆ.....ஆஅ....

பெண்: பாதம் முதல் தலை வரை...
பார்த்து நின்ற தலைவனை.
பாட வந்தேன் நூறு முறை...

ஆண்: அணைத்தால் தேவ லோகம்...
அருகே வந்து சேரும்...

பெண்: நினைத்தால் இங்கு யாவும்
இனிமை என்று கூறும்...

ஆண்: ஆஹாஹ் இது மார்கழி மாதம்...
அம்மாடியோ முன்பனி வீசும்...
சூடேற்றும் பூ முல்லை வாசம்....

பெண்: அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்

ஆண்: ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

இருவர்: ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்

குழு: ஆஅ.....ஆஆ.....ஆஅ....(2)

A little space to find your voice.

About Andhi Varum Neram

Andhi Varum Neram is a song from Mundhanai Mudichu (1983). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer