Arule Arul Song Lyrics

Kavalai Padathe Sagodhara·1998

A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்
அமுதே அதன் சுவையே
அன்பின் இசையே தினம் தொழுதோம்

பெண் குழு: சங்கரி சுந்தரி சௌந்தரி
அய்கிரி நந்தினி
ஆகிடும் திரிபுரையே அருள் மறையே
சாத்திரம் போற்றிடும் சாம்பவி
சங்கடம் தீர்த்திடும் பைரவி

பெண் குழு: ஷ்யாமளையே அருள் உமையே
திருநாள் இந்தத் திருநாள்
உனை தொழும் நாள்
அருள் பெறும் நாள்

பெண் குழு: அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்

பெண் குழு: மறந்த எம்மை மறந்திடாது
காக்கும் கரங்கள் உனது
வரம் தராது எமக்கு ஏது
அருள் நிறைந்த உலகு

பெண் குழு: தேடிடும் அடியவர்க்கிறங்கி
திருவடி தரிசனம் தா
சாத்திரம் போற்றிடும் சாம்பவி
சங்கடம் தீர்த்திடும் பைரவி
அருள் உமையே ஓம்

பெண் குழு: அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்
அமுதே அதன் சுவையே
அன்பின் இசையே தினம் தொழுதோம்

பெண் குழு: மனித குலமும் இனிது வாழ
கடைக் கண் பார்வை காட்டு
துரத்தும் வறுமை தொடரும் துயரம்
நெருங்கிடாமல் ஓட்டு

பெண் குழு: உலகங்கள் முழுவதும் கலகம்
அது தொலைந்திட வழி ஒன்று தா
மங்கல மங்கள நாயகி
மாதவி மாதவன் சோதரி
அருள் புரிவாய் ஓம்

பெண் குழு: அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்
அமுதே அதன் சுவையே
அன்பின் இசையே தினம் தொழுதோம்

பெண் குழு: சங்கரி சுந்தரி சௌந்தரி
அய்கிரி நந்தினி
ஆகிடும் திரிபுரையே அருள் மறையே
சாத்திரம் போற்றிடும் சாம்பவி
சங்கடம் தீர்த்திடும் பைரவி

பெண் குழு: ஷ்யாமளையே அருள் உமையே
திருநாள் இந்தத் திருநாள்
உனை தொழும் நாள்
அருள் பெறும் நாள்

பெண் குழு: அருளே அருள் மணியே
மணிச் சுடரே பதம் பணிந்தோம்

A little space to find your voice.

About Arule Arul

Arule Arul is a song from Kavalai Padathe Sagodhara (1998). Performed by Female Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer