Chinna Chinna Malar Song Lyrics

Kavalai Padathe Sagodhara·1998

Kavalai Padathe Sagodhara movie poster
Singer
Deepika, S. N. Surendar,
A continuous glide, at your pace.
Text size

உன்னி கிருஷ்ணன் மற்றும் அருண்மொழி

பெண்: பெண்ணாய் பிறந்த
பெண்ணெல்லாம்
தாயாய் ஆகிட வேண்டும்
தாயாய் ஆனவள் மடி மீது
மழலை ஆடிட வேண்டும்
வாழையடி வாழை என
வந்த குலம் பெருமை பெறும்
புண்ணியவதி உன் வரவால்
பொங்குதடி எங்கள் மனம்
ஓ......ஓ.......ஓ...

ஆண்: சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

ஆண்: இன்பம் இன்று இங்கு இருக்கு
இளம் கொடிக்கு ரெண்டில்
ஒரு பங்கு இருக்கு
இன்பம் இன்று தந்த மகள்
கொண்டு வந்த சந்ததிக்கு
சந்தம் உள்ள சிந்து சொல்லடி

ஆண் குழு: ஹோய் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

ஆண்: சின்னக் கண்ணன் போல்
பிறப்பானோ
ஸ்ரீ ராமன் போல் வருவானோ

பெண்: ஸ்ரீ தேவிதான் பிறப்பாளோ
இல்லை மீனாட்சிதான் வருவாளோ

ஆண்: என்ன என்னவோ
எந்தன் கற்பனையிலே
நல்ல வண்ண வண்ணக்
கனவுகள் போல்

ஆண் குழு: ஹேய் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

ஆண்: பூப் போன்ற சிறு முகம் பார்க்க
மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
அன்ன நடை நடந்து
அல்லி என மலர்ந்து
அள்ளி வரும் ஆனந்தம் கோடி

ஆண்: பூப் போன்ற சிறு முகம் பார்க்க
மனம் பூஞ்சோலை போல் அழகாடும்

ஆண்: அன்ன நடை நடந்து
அல்லி என மலர்ந்து
அள்ளி வரும் ஆனந்தம் கோடி

ஆண்: பேசும் பிள்ளை மொழி கேட்டால்
மனம் பாடும் ராகங்களும் நூறு
முத்தம் சிந்தி வரும் பூவாய்
அதில் நித்தம் தேன் சிதறும் பாகாய்

ஆண்: முத்து விளைந்து வரும்
தத்தி தவழ்ந்து வரும்
சுட்டிப் பிள்ளை
மனதை கட்டிக் கட்டி
சொக்க வைக்க

பெண் குழு: சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

ஆண் குழு: சூரியனும் வானைச் சுற்ற
விட்டு வைப்பான்
சந்திரனைச் சாந்து என்று
பொட்டு வைப்பான்
விண்ணவரும் தான் வணங்கும்
வேலன் இந்தச் சின்னவனோ

ஆண் குழு: மண்ணுலகம் சுற்றி வந்து
வெற்றி கொள்ளும் மன்னவனோ
சின்னவனோ மன்னவனோ
இந்திரனோ சுந்தரனோ
மன்மதனோ கந்தர்வனோ

ஆண்: ஆஆஆஅ.....தனன னன னன
ஆஆஅ......ஆஅ.....ஆஅ....

ஆண்: காணாத காட்சிகள் காட்டும்
உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
தங்க மணி நிலவின்
முல்லை மலர் அழகின்
சங்கமத்தில் ஆனந்தம் கோடி

ஆண்: காணாத காட்சிகள் காட்டும்
உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்

ஆண்: தங்க மணி நிலவின்
முல்லை மலர் அழகின்
சங்கமத்தில் ஆனந்தம் கோடி

ஆண்: கண்ணைச் சிமிட்டி அந்த வானில்
நல்ல வெள்ளி சிரிக்குமடி பெண்ணே
வீணை ஒலிக்கும் அதன் பேச்சில்
அந்த விண்ணும் வளையுமடி கண்ணே

ஆண்: சிந்தும் நவமணிகள்
அன்பே உன் புன்னகையில்
முத்து மணி பதித்த
சித்திரமே அற்புதமே

பெண் குழு: சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல

ஆண்: ஹோய் வளருதடி

பெண் குழு: தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்ல

ஆண்: தான் வருகுதடி

ஆண்: இன்பம் இன்று இங்கு இருக்கு

பெண் குழு: இளம் கொடிக்கு ரெண்டில்
ஒரு பங்கு இருக்கு

ஆண்: இன்பம் இன்று தந்த மகள்
கொண்டு வந்த சந்ததிக்கு
சந்தம் உள்ள சிந்து சொல்லடி

பெண் குழு: சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல

ஆண்: ஹோய் வளருதடி

பெண் குழு: தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்ல

ஆண்: தான் வருகுதடி

அனைவரும்: சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

A little space to find your voice.

About Chinna Chinna Malar

Chinna Chinna Malar is a song from Kavalai Padathe Sagodhara (1998). Performed by Deepika, S. N. Surendar. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer