Enna Samayaloo Song Lyrics

Unnal Mudiyum Thambi·1988

Unnal Mudiyum Thambi movie poster
Singer
S. P. Balasubrahmanyam, K. S. Chithra and Sunandha
Lyricist
Ilaiyaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என்ன சமையலோ
என்ன சமையலோ எதிர்த்து
கேட்க யாருமில்லை என்ன
சமையலோ

ஆண்: என்ன சமையலோ
என்ன சமையலோ எதிர்த்து
கேட்க யாருமில்லை என்ன
சமையலோ

பெண்: அண்ணி சமையல்
தின்று தின்று மரத்துப்
போனதே

பெண்: என்னடி

பெண்: நாக்கு மரத்துப்
போனதே அடுத்த அண்ணி
சமையல் ருசிக்க ஆசை
வந்ததே

பெண்: அடியே மோகனா
அடுப்படி எனக்கென்ன சொந்தமா
நீயும் வந்து சமைத்துப் பாரு
பேச்சை வளர்த்தால் உனக்கிங்கு
கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப் பாரடி

ஆண் & பெண்: சமைத்துக்
காட்டுவோம் இஷ்டம்போல
நாங்கள் இங்கே சமைத்து
வெளுத்துக் கட்டுவோம்

ஆண்: கல்யாணி ராகம்
போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன்
களைந்திடு அரிசியை
கல்யாணி கல்…

பெண்: கல்
இஸ் ஆணி

பெண்: ஆணி
கவனி கல்யாணி

பெண்: தநிஸரிநித
தநிநிததம கரிகரிகரி
கரிகரிகரி கறிகாய்களும்
எங்கே கறிவேப்பிலை எங்கே

ஆண்: கரிகரிகரி
கரிகரிகரி கறிகாய்களும்
இங்கே கறிவேப்பிலை இங்கே

பெண்: மா மா மா மா மா
மா மா மா மா மா மஞ்சள்
பொடியும் எங்கே மசாலா
பொடி எங்கே

ஆண்: மாமா மா மா
மா மா மா மா மா மா
மஞ்சள் பொடியும் இங்கே
மசாலா பொடி இங்கே

பெண்: பபபபதா பருப்பு
இருக்குதா

ஆண்: இருக்கு

பெண்: தனி தனி தனி
தனி தனி தனி தனியா
இருக்கா

ஆண்: இருக்கு

ஆண்: நிரிநி கொஞ்சம்
பொறு நீ அடுப்பைக்
கொஞ்சம் கவனி கொதிக்கும்
நீரில் அரிசியைப் போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு

ஆண்: சமைத்துக்
காட்டுவோம் ஹாஹா
அய்யய்யோ அப்பா
வந்துட்டாங்க

ஆண்: அப்பா வரும் நேரம்
ச தா மா க ச தா மா க சாதமாக
தா ம தா ம அப்பா வரும் நேரம்
சாதமாக தாமதமா ராகம் வசந்தா
நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா
பாடு வசந்தா

பெண்: கமகமகம
கமகமகம வாசம் வருதே
ம சா லா.. கரம் மசாலா
கமகமகம கமகமகம வாசம்
வருதே

ஆண்: சரி சரி சரி சரி
சரி சரி விளையாட்டுகள்
போதும் க ம கா மா தா நீ
சாதம் ரெடியா

பெண்: சாதமிருக்கு ரெடியா
ரசம் கொதிக்குது தனியா

ஆண்: சமையல் ரெடி

பெண்: அவியல் ரெடி

ஆண்: சமையல் ரெடி

பெண்: அவியல் ரெடி

ஆண்: வருவல் ரெடி

பெண்: பொரியல் ரெடி

ஆண் & பெண்: தாதீங்கிணதோம்
தாதீங்கிணதோம் சமையல் வேலை
முடிஞ்சு போச்சு முடிஞ்சு போச்சு

ஆண்: இலையைப் போடடி
பெண்ணே இலையைப் போடடி
சமைத்த உணவை ருசித்துப்
பார்க்க இலையைப் போடடி

A little space to find your voice.

About Enna Samayaloo

Enna Samayaloo is a song from Unnal Mudiyum Thambi (1988). Performed by S.P. Balasubrahmanyam, K. S. Chithra, Sunandha. Music by Ilaiyaraaja. Lyrics by Ilaiyaraja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer