Aalolankili Thopilae Song Lyrics

Siraichalai·1996

Singer
S.P. Balasubrahmanyam and K.S. Chithra
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

குழு: ................................

பெண்: ஆலோலங் கிளி
தோப்பிலே தங்கிடும் கிளி
தங்கமே இல்லாததை
சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி
கூத்துக்காரி

ஆண்: ஆற்றில் குளித்த
தென்றலே சொல்லுமே
கிளி சொல்லுமே துள்ளாதடி
துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி
குறும்புக்காரி

பெண்: நெஞ்சில் ஒரு
தும்பி பறக்கும் அய்யோ
அய்யய்யோ

ஆண்: செல்லக்கிளி
சிந்து படிக்கும் ஹைய்யோ
ஹைஹைய்யோ

பெண்: ஆலோலங் கிளி
தோப்பிலே தங்கிடும் கிளி
தங்கமே இல்லாததை
சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி
கூத்துக்காரி

ஆண்: காதல் கடக்குது
இதயம் உன் கண்ணில்
நீந்தித்தானோ ஹோய்

பெண்: துடிதுடிக்கிற
நெஞ்சில் இனி தூவானம்
மழைதானோ ஹோய்

ஆண்: காதல் விழாக்
காலம் கைகளில் வா
வா ஈர நிலாப் பெண்ணே

பெண்: தெம்மாங்கை
ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல்
ஆடி வா

ஆண்: வீணை புது வீணை
சுருதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில்
வானம் வளைப்பேனே

பெண்: ஆலோலங் கிளி
தோப்பிலே தங்கிடும் கிளி
தங்கமே இல்லாததை
சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி
கூத்துக்காரி

பெண்: கனவு கொடுத்த
நீயே என் உறக்கம்
வாங்கலாமோ ... ஓ

ஆண்: கவிதை விழிக்கும்
நேரம் நீ உறங்கப்
போகலாமோ ஹோய்

பெண்: பூவிழியின் ஓரம்
வானவில் கோலம்
பொன்மகளின் நாணம்

ஆண்: நிலாவின் பிள்ளை
இங்கு நீதானோ பூஞ்சோலை
பூக்களுக்குத் தாய்தானோ

பெண்: ஆசை அகத்திணையா
வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வாவா புதுக்காதல்
குறுந்தொகையா

ஆண்: ஆற்றில் குளித்த
தென்றலே சொல்லுமே
கிளி சொல்லுமே துள்ளாதடி
துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி
குறும்புக்காரி

பெண்: நெஞ்சில் ஒரு
தும்பி பறக்கும் அய்யோ
அய்யய்யோ

ஆண்: செல்லக்கிளி
சிந்து படிக்கும் ஹைய்யோ
ஹைஹைய்யோ

பெண்: ஆலோலங் கிளி
தோப்பிலே தங்கிடும் கிளி
தங்கமே இல்லாததை
சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி
கூத்துக்காரி

A little space to find your voice.

About Aalolankili Thopilae

Aalolankili Thopilae is a song from Siraichalai (1996). Performed by S.P. Balasubrahmanyam, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer