Munnooru Naal Song Lyrics

Kasthuri Manjal·1992

Kasthuri Manjal movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா

ஆண்: உண்ணாம தானிருந்து
உறங்காம விழிச்சிருந்து
என்னத்தான்
காலமெல்லாம் காத்தா

ஆண்: பெத்த தாயப் போல
ஒரு தெய்வம் இல்ல
நானும் கும்பிடத்தான்
வேறு கோயில் இல்ல
அவ தாலாட்டு தந்த வரம்
என் பாட்டுதான்

ஆண்: முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா

இசை: .................

ஆண்: பட்டாள வேலைக்குத்தான்
போய் சேர்ந்த புருஷனும் தான்
வீடு வந்து சேரவில்ல
சேதி என்ன தெரியவில்ல

ஆண்: ஆனாலும் தன் புருஷன்
வந்து சேர கூடுமுன்னு
வச்ச பூவ எடுக்கவில்ல
நெத்திப் பொட்டு
கலைக்கவில்ல

ஆண்: தனியா இருந்தா
தவிச்ச என் ஆத்தா
எனத்தான் வளர்த்து
குடும்பத்த காத்தா

ஆண்: அவ பட்ட துன்பம்
ஒண்ணா ரெண்டா
பாட்டுல சொல்ல
அவ விட்ட கண்ணீர் என்னால்
இப்ப காயுது மெல்ல

ஆண்: முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா

இசை: ...............

ஆண்: முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா

ஆண்: உண்ணாம தானிருந்து
உறங்காம விழிச்சிருந்து
என்னத்தான்
காலமெல்லாம் காத்தா

ஆண்: பெத்த தாயப் போல
ஒரு தெய்வம் இல்ல
நானும் கும்பிடத்தான்
வேறு கோயில் இல்ல
அவ தாலாட்டு தந்த வரம்
என் பாட்டுதான்

ஆண்: ஏதாச்சும் சிறு துரும்பு
எம் மேல விழுந்துச்சுன்னா
தன் விழியில் முள்ளு ஒண்ணு
தச்சது போல் துடித்திடுவா

ஆண்: யாராச்சும் கண்ணு வச்சி
எம் மேனி இளைக்குமுன்னு
எங்க ஊரு அம்மனுக்கு
பொங்க வச்சு படைச்சிடுவா

ஆண்: உசுரா உடலா இருக்கும் என் ஆத்தா
இரவா பகலா ஒழைச்சத பாத்தா
அட இந்த ஜென்மம் பத்தாதய்யா
நன்றிய சொல்ல
அத சொல்லாவிட்டா
நானும் இங்கே மனுஷனுமல்ல

ஆண்: முன்னூறு நாள் சுமந்து
முள் மேலே தவம் இருந்து
பெத்துத்தான்
பேர் வெச்ச ஆத்தா

ஆண்: உண்ணாம தானிருந்து
உறங்காம விழிச்சிருந்து
என்னத்தான்
காலமெல்லாம் காத்தா.....

A little space to find your voice.

About Munnooru Naal

Munnooru Naal is a song from Kasthuri Manjal (1992). Performed by S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer