Alangara Pon Oonjale Song Lyrics

Sonnadhu Nee Thanaa·1978

Singer
Jency and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ....
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே

ஆண்: அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ....
அழகாடும் பூஞ்சோலையே

பெண்: ............................

ஆண்: வானில் உலவும் ஊர்வசி
வனத்தில் தவழும் மாங்கனி
எனை மயக்க வந்தவள்
மாலை பூத்த மல்லிகை
மயக்கம் சேர்த்த மெல்லிசை
எனை தழுவி நின்றவள்

ஆண்: அழகு கலைகள் நிலவும் எந்தன்
அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ....
அழகாடும் பூஞ்சோலையே

ஆண்: ஏட்டில் பாடும் நாயகி
எழுத்தில் கூடும் காரிகை
புது எண்ணம் கண்டவள்
கூட்டில் வாழும் பைங்கிளி
கூடச் சொல்லும் மான் விழி
மது கிண்ணம் கொண்டவள்

ஆண்: இளமை குலுங்க இனிமை வழங்கும்
அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ....
அழகாடும் பூஞ்சோலையே

பெண்: லா....லலல லா
லா.....லலல லா

ஆண்: காதல் ராணி குங்குமம்
காளை மனதில் சங்கமம்
புது இன்பம் துவங்கலாம்
கோவில் காணும் பூஜைகள்
தேவன் கொண்ட ஆசைகள்
இனி என்றும் நிலைக்கலாம்

ஆண்: புதிய வழியை எடுத்து சொல்லும்
அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ....
அழகாடும் பூஞ்சோலையே
இளமாதுளை மலைத்தேன் சுவை
முத்தாரம் சூடி முத்தாடு கண்ணே

ஆண்: அலங்கார பொன் ஊஞ்சலே...ஏ....
அழகாடும் பூஞ்சோலையே

A little space to find your voice.

About Alangara Pon Oonjale

Alangara Pon Oonjale is a song from Sonnadhu Nee Thanaa (1978). Performed by Jency, Malaysia Vasudevan. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer