Kadai Thengaiyo Song Lyrics

Sattam En Kaiyil·1978

Sattam En Kaiyil movie poster
Singer
Malaysia Vasudevan and Chorus
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

ஆண் குழு: ஹேய்....யா....

பெண் குழு: ஹே.....ஹே.....

ஆண் குழு: எங்க ரத்னம்

பெண் குழு: தங்க ரத்னம்

ஆண் குழு: இன்று போல

பெண் குழு: என்றும் வாழ்க

ஆண் குழு: எங்க ரத்னம்

பெண் குழு: தங்க ரத்னம்

ஆண் குழு: இன்று போல

பெண் குழு: என்றும் வாழ்க

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண்: ஆடிக்குப் பின்னே தானே
ஆவணி சிட்டு இந்தா தாவணி கட்டு
யாருக்கும் சொந்தம் தானே
ஆண்டவன் சொத்து

ஆண்: பள்ளிக்குப் போற புள்ள புத்தகக் கட்டு
இது புத்திக்கு வித்து
நீ பாரதம் காக்க வேணும்
பட்டத்தைப் பெற்று

பெண் குழு: பஞ்சமென்று வந்தவர்க்கு

ஆண்: சோறு போடு

ஆண் குழு: பாரில் உள்ள செல்வங்களை

ஆண்: கூறு போடு
நெஞ்சுக்குள்ளே நீ ஒரு நீதி தேடு....

ஆண் குழு: எங்க ரத்னம்

பெண் குழு: தங்க ரத்னம்

ஆண் குழு: இன்று போல

பெண் குழு: என்றும் வாழ்க

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண்: நல்ல நல்ல தலைவர்கள்
நாட்டில் பிறந்தார்
ஏழை வீட்டில் பிறந்தார்
நாட்டினைக் காக்க
சிறைக் கூட்டிலிருந்தார்

ஆண்: கல்லுக்குள் நாருரிக்கும்
ஆளும் இருந்தார்
அவர் வாழ்வும் அடைந்தார்
காமத்தில் வெள்ளத்திலே
ஓடி மறைந்தார்

பெண் குழு: உத்தமருக்கு
என்றும் உண்டு வரலாறு

ஆண்: அது ஊர் கெடுக்கும்
பேர்வழிக்குக் கிடைக்காது
தத்துவத்தில் என்றும் இல்லை தகராறு

ஆண் குழு: எங்க ரத்னம்

பெண் குழு: தங்க ரத்னம்

ஆண் குழு: இன்று போல

பெண் குழு: என்றும் வாழ்க

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தளைக்கட்டும் அள்ளியே கொடு

ஆண்: கடைத் தேங்காயோ வழிப் பிள்ளையாரோ

ஆண் குழு: ஏஹேஹே எங்க ரத்னம்

பெண் குழு: ஏஹேஹே தங்க ரத்னம்

ஆண் குழு: ஏஹேஹே இன்று போல

பெண் குழு: ஏஹேஹே என்றும் வாழ்க

ஆண் குழு: ஏஹேஹே எங்க ரத்னம்

பெண் குழு: ஏஹேஹே தங்க ரத்னம்

ஆண் குழு: ஏஹேஹே இன்று போல

பெண் குழு: ஏஹேஹே என்றும் வாழ்க

குழு: ஏஹேஹே எங்க ரத்னம்
தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க
எங்க ரத்னம் தங்க ரத்னம்
இன்று போல என்றும் வாழ்க

A little space to find your voice.

About Kadai Thengaiyo

Kadai Thengaiyo is a song from Sattam En Kaiyil (1978). Performed by Malaysia Vasudevan, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer