Devadhaigal Vaazhthuvathu Song Lyrics

Thirukkalyanam·1978

Singer
S. Janaki and P. Susheela
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

பெண்: தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
காவியங்கள் பாடுவதும்
நான் நடத்தும் சம்சாரமே

பெண்: தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே

பெண்: நான் வணங்கும் பொற் கோயில் அது
தலைவனின திருமுகமே
நான் அறிந்த கல்வி அது
அவனது திருமொழியே
நிலாவில் நான் ஒரு கலை
விழாவில் நான் ஒரு சிலை
இதுதான் தெய்வ நிலை

பெண்: தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே

பெண்: மாலையிலே வெண் மல்லிகைப்பூ
குழலினில் சிரிக்கின்றது
ஆலயம் போல என் பள்ளியறை
இரவினில் ஜொலிக்கின்றது
இணைந்த மாணிக்க ரதம்
மயங்கும் காணிக்கை நிதம்
இதன் பேர் தேவ சுகம்

பெண்: தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே

பெண்: எத்தனை பிறவிகள் எடுத்தாலும்

பெண்: இருவரும் ஒன்றாய் துணை வாழ்க
இல்லற இன்பக் கலை வாழ்க

பெண்: கங்கை கரையில் காதலர் போல்
கண்ணனும் ராதையும் கொஞ்சுதல் போல்
கனவினில் காவியம் நான் பார்த்தேன்
காண்கிறேன் இன்று காண்கிறேன்
இந்த காதலர் வடிவினிலே
நூறாண்டுகள் நீ வாழ்கவே.......

பெண்: தேவதைகள் வாழ்த்துவது
தேவதேவி கல்யாணமே
பாவையிவள் பாடுவது
பூர்வ ஜென்ம சங்கீதமே......

பெண்: தேவதைகள் வாழ்த்துவது
தேவ தேவி கல்யாணமே

A little space to find your voice.

About Devadhaigal Vaazhthuvathu

Devadhaigal Vaazhthuvathu is a song from Thirukkalyanam (1978). Performed by S. Janaki, P. Susheela. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer