Pattupoove Unnai Partha Song Lyrics

Naanum Oru Thozhilali·1986

Naanum Oru Thozhilali movie poster
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி........

ஆண்: பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை

ஆண்: நடையோர் நடனம் இடையோர் நளினம்
நிலவின் ரதி பிம்பம் நீ உலவும் ரதி வம்சம்
இரு புருவமும் கூன் விழும் வான் பிறை
சிறு பனி இதழ் மடல் விடும் தாமரை

ஆண்: உன் பூமேனி பாலாடை அதில்
நான் தந்த மேலாடை
அம்மம்மா உன் அங்கம் செந்தங்கம்
என் கண் கூசுதே............................

ஆண்: பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை

ஆண்: முழங்கால் அளவு உடையோ குறைவு
அடடா அது போதும்
மனக் கடலில் அலை மோதும்
இந்த தரிசனம் கிடைத்தது பாக்கியம்
இதை எழுதிட இல்லை ஒரு வாக்கியம்

ஆண்: நீ மூவாறு பதினெட்டு
இன்னும் தாண்டாத பூஞ்சிட்டு
அடியம்மா என் கண்ணும்
என் நெஞ்சும் உன் பின்னோடுதே... ...

ஆண்: பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை

ஆண்: இனிமேல் ஒருத்தி உனைப் போல் அழகி
இயற்கை படைக்காது அந்த திறமை அதற்கேது
அடி உனை விட குறைந்தவள் ஊர்வசி
உந்தன் அடிமை என்றிருப்பவள் மேனகை

ஆண்: நீ தள்ளாடும் பல்லாக்கு
தென்றல் கிள்ளாத பூங்கொத்து
அடி அம்மா என் யோகம் உன் தேகம்
என் கண் கொண்டதே...................

ஆண்: பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை
தன்னாலே கவி ஆனேன் உன்னாலே
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி
ஓ மை ஸ்வீட்டி ஓ டேட்டிங் பியூட்டி........

ஆண்: பட்டுப்பூவே உன்னைப் பார்த்தா
பாட்டுப்பாட ஆசை

A little space to find your voice.

About Pattupoove Unnai Partha

Pattupoove Unnai Partha is a song from Naanum Oru Thozhilali (1986). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer