Vaazhvae Vaa Song Lyrics

Saadhanai·1986

Saadhanai movie poster
Singer
S. Janaki and S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாழ்வே வா வாழ்வோம் வா

பெண்: நீ எங்கே நான் அங்கே

ஆண்: தேவன் தேவி விளையாட்டு
தேவை என்றால் தலையாட்டு

பெண்: நான்தான் ஆடும் இளங்கீற்று
நீ தான் மோதும் பனிக் காற்று

ஆண்: வாழ்வே வா வாழ்வோம் வா

பெண்: நீ எங்கே நான் அங்கே

ஆண்: பாலில் நீர் போல என்னோடு சேர்ந்த
பாவை நீயல்லவோ

பெண்: தேகம் நீங்காத மேலாடை போல
தேவை நீயல்லவோ

ஆண்: காணாததை நான் காணவே
காலங்கள் கை கூடுமோ

பெண்: ஆ... இலை மறைவாக கனி இருந்தாலும்

ஆண்: மணம் வரும் போது அணில் வரக் கூடும்

பெண்: காய் பழுத்தால் கையில் விழும்

ஆண்: வாழ்வே வா

பெண்: வாழ்வோம் வா

பெண்: வீணை நானாக நீ மீட்ட வேண்டும்
மாலை பொழுதல்லவா

ஆண்: ராகம் தாளங்கள் நான் காட்டும் போது
தாகம் வருமல்லவா

பெண்: தாகங்களை தீர்த்தாலென்ன
நீரோடை நீயல்லவா

ஆண்: ஆ... தனி இடம் பார்த்து தளிருடல் சேர்த்து

பெண்: தழுவிட நீயும் நழுவிட நானும்

ஆண்: நாணம் என்ன ஊடல் என்ன

பெண்: வாழ்வே வா

ஆண்: வாழ்வோம் வா
நீ எங்கே

பெண்: நான் அங்கே

ஆண்: தேவன் தேவி விளையாட்டு
தேவை என்றால் தலையாட்டு

பெண்: நான்தான் ஆடும் இளங்கீற்று
நீ தான் மோதும் பனிக் காற்று

ஆண்: வாழ்வே வா வாழ்வோம் வா வா வா

பெண்: நீ எங்கே நான் அங்கே...

A little space to find your voice.

About Vaazhvae Vaa

Vaazhvae Vaa is a song from Saadhanai (1986). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer