Poovukku Poovale Song Lyrics

Anand·1987

Anand movie poster
Movie
Anand
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
கலங்குதே.......மயங்குதே......காதல் வாடுதே....

ஆண்: பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

ஆண்: காதல் என்ற வேதனை
நாளும் என்ன சோதனை
காண வேண்டும் தேவியை
கேட்க வேண்டும் கேள்வியை

ஆண்: தேகம் எங்கும் மேவி நின்று
ஓடுகின்ற ஜீவனும்
வேறு வேறு பாதை தேடி
விலகி இன்று போகுதே

ஆண்: பூ விட்டு பூந்தென்றல் போகுமோ
பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ
பூ விட்டு பூந்தென்றல் போகுமோ
பெண் உள்ளம் என் கண்ணீர் காணுமோ
பொழுதும் விடியுமோ......ஓ......

ஆண்: பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

ஆண்: வானும் காற்றும் பூமியும்
வடிவம் கூட மாறலாம்
நீயும் நானும் பாடிய
நினைவு மாறக் கூடுமோ

ஆண்: தேவி பேரை பாடும் நாவும்
வேறு பாடல் பாடுமோ
ஆவி என்று கலந்த ஜோதி
பாதை மாறக் கூடுமோ

ஆண்: ஆனந்தம் என் வீட்டை மறந்தது
அழுது விழிகள் கறைந்தது
ஆனந்தம் என் வீட்டை மறந்தது
அழுது விழிகள் கறைந்தது
அவளின் நினைவிலே...ஓ....

ஆண்: பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
கலங்குதே.......மயங்குதே......காதல் வாடுதே....

ஆண்: பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று
பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று
பொண்ணுக்கு பொன்னான நெஞ்சம் இன்று

A little space to find your voice.

About Poovukku Poovale

Poovukku Poovale is a song from Anand (1987). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer