Athi Mara Poovidhu Song Lyrics

Saadhanai·1986

Saadhanai movie poster
Singer
S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ ஹா......ஆ......ஆ......ஹா...
ஆ ஹா.....ஆ.....ஆ........ஹா...
ஆ... அஹ்ஹஹா அஹ்ஹஹா ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ.......ஆ......ஆஹஹா...

பெண்: அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம்தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்

பெண்: அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது

பெண்: புன்னகையில் புது கவிதைகள் எழுதிட
பார்வைகள் மலர மலர
மெல்லிசையின் நயம் சலங்கையில் விளங்கிட
பாதங்கள் அசைய அசைய
வந்த மகள் ஒரு பூங்கொடி
வண்டு துளைத்திடும் மாங்கனி
சந்த மொழிகளின் காவியம்
சிந்தை மயக்கிடும் ஓவியம்

பெண்: கோடை வரும் நாள் வீசும் வாடை நான்
வாடை வரும் நாள் சூடும் போர்வை நான்
மல்லிகையைச் சூடி மந்திரங்கள் பாடி
பருவம் நடனம் பயிலும் நளினம்

பெண்: அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம் தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்

பெண்: அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது

பெண்: புள்ளி மயில் நடம் புரிந்திட புரிந்திட
பாவங்கள் விளைய விளைய
கையளவு இடை நெளிந்திட நெளிந்திட
பூவுடல் வளைய வளைய
கண்ணின் இமைகளில் ஆடிடும்
எண்ண கனவுகள் ஆயிரம்
இந்த குல மகள் நூதனம்
அந்த கலை மகள் சீதனம்

பெண்: பாடல் இருந்தால் ராகம் சேராதோ
ஆடல் இருந்தால் தாளம் கூடாதோ
திங்கள் ஒரு பாதி தென்றல் ஒரு பாதி
விழியில் கலந்து வழியும் வடிவம்

பெண்: அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
நந்தவனம் தான் என் நல்ல மனம் தான்
எந்த புறமும் என் அந்தப்புரம் தான்
சிந்தனைகள் ஓட கற்பனைகள் கூட
இளமை கொடியில் இதழ்கள் விரியும்

பெண்: அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
அத்திமர பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது

A little space to find your voice.

About Athi Mara Poovidhu

Athi Mara Poovidhu is a song from Saadhanai (1986). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer