Raja Mohini Song Lyrics

Saadhanai·1986

Saadhanai movie poster
Singer
S. Janaki and S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ராஜ மோகினி சுக ராக தேவி நீ
ராஜ மோகினி சுக ராக தேவி நீ
மதுத் தேன் குடங்கள்
இடை மேல் சுமந்து போகும்
ராஜ மோகினி சுக ராக தேவி நீ

பெண்: காதல் என்றும் ஓய்வதில்லை
கவிதை சொன்னது

ஆண்: காதல் கண்ணில் தூக்கம் இல்லை
கவிஞர் சொன்னது

பெண்: இரு கண்ணில் உன் பேரை
எழுதிப் பார்க்கிறேன்

ஆண்: உறங்காமல் இருந்தாலும்
கனவு காண்கிறேன்

பெண்: எந்த நாளும் எந்தன் ஜீவன்

ஆண்: எந்த நாளும் எந்தன் ஜீவன்

இருவர்: நீயே...

பெண்: ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும் இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே நீ எந்தன் ஜீவனே

ஆண்: நாணம் கொண்டு போகும் பெண்மை
என்னை மீறிப் போகுமா

பெண்: வேகமாக போகும் மேகம்
வானம் தாண்டிப் போகுமா

ஆண்: மடி மீது தலை வைத்து
மயங்கப் போகிறேன்

பெண்: விழியோடு இமை வைத்து
உறங்கப் போகிறேன்

ஆண்: உன்னை அள்ளி கொண்ட பின்பு

பெண்: என்னை அள்ளி தந்த பின்பு

இருவர்: பிரிவேது...

ஆண்: ராஜ மோகினி சுக ராக தேவி நீ
ராஜ மோகினி சுக ராக தேவி நீ

பெண்: இதயம் துடிக்கும் இசையில்
சுருதி சேர்க்கும் ராக ராஜனே

ஆண்: சுக ராக தேவி நீ...

A little space to find your voice.

About Raja Mohini

Raja Mohini is a song from Saadhanai (1986). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer