Manjal Nilaavukku Song Lyrics

Muthal Iravu·1979

Muthal Iravu movie poster
Singer
P. Susheela and Jayachandran
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஓ......ஓ......ஓ.....ஓ

ஆண்: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

பெண்: இது முதல் இரவு
இது முதல் கனவு

ஆண்: இந்த திருநாள்

பெண்: தொடரும்

ஆண்: தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆண்: ஆடுவது பூந்தோட்டம்
தீண்டுவது பூங்காற்று

பெண்: ஆசை கிளிகள் காதல் குயில்கள்
பாடும் மொழிகள் கோடி

ஆண்: ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்

பெண்: அணைக்கின்ற பசுங்கொடிகள்
ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்

பெண்: ஓ......ஓ......ஓ.....ஓ

ஆண்: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

பெண்: இது முதல் இரவு
இது முதல் கனவு

ஆண்: இந்த திருநாள்

பெண்: தொடரும்

ஆண்: தொடரும்

பெண்: வீணையென நீ மீட்டு
மேனிதனில் ஓர் பாட்டு

ஆண்: மேடை அமைத்து மேளம் இசைத்தால்
ஆடும் நடனம் கோடி

பெண்: காலம் முழுதும் காவியம்
ஆனந்தம் இராகம்

ஆண்: இனி எந்த தடையும் இல்லை
எந்நாளும் உறவின்றி பிரிவும் இல்லை

பெண்: ஓ......ஓ......ஓ.....ஓ

ஆண்: மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

பெண்: இது முதல் இரவு
இது முதல் கனவு

ஆண்: இந்த திருநாள்

பெண்: தொடரும்

ஆண்: தொடரும்

பெண்: ஓ......ஓ......ஓ.....ஓ

A little space to find your voice.

About Manjal Nilaavukku

Manjal Nilaavukku is a song from Muthal Iravu (1979). Performed by P. Susheela, Jayachandran. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer