Adi Raakayee Song Lyrics

Annakili·1976

Annakili movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: அடி ராக்காயி
மூக்காயி குப்பாயி
செவப்பாயி கஸ்தூரி மீனாக்‌ஷி
தங்கப்பல் காரைய்யா
தங்கமகளுக்கும்
வாத்தியார் அய்யாவுக்கும்
தை மாசம் கல்யாணம்
நெல்லு குத்த வாங்கடியோ

பெண்: சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்....

குழு: சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்....

பெண்: பத்தோடு ஒண்ணு
பலகாரம் பன்ன
சத்தாக மாவிடிங்க

குழு: ஓ ஒய்யா

பெண்: கல்லோடு உமியும்
சேராம பாத்து
பக்குவமா இடிங்க

பெண்: பஞ்சு பஞ்சாக
வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக
வரணும் இடியாப்பம்
பஞ்சு பஞ்சாக
வரணும் பணியாரம்
வெள்ளி நூலாக
வரணும் இடியாப்பம்

பெண்: இதுதானே
கல்யாண விருந்தென்று
ஊரே பாரட்ட வேணும்

குழு: சுத்த சம்பா பச்ச நெல்லு
குத்தத்தா வேணும்
முத்து முத்தா பச்சரிசி
அள்ளத்தா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம்
பொங்கத்தா வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்....

குழு: லாலி லல்லி லாலி லல்லி....
லாலி லாலி லாலி லாலி
லாலி லல்லி
லாலி லாலி லாலி லாலி

பெண்: மாப்பிள்ளை பொண்ணு
மணவறை காண
பொன்னாலே கோலமிடுங்க

குழு: ஓ ஒய்யா

பெண்: மாவிலை தென்னை
இளங்குருத்தாக
வீடெங்கும் ஆடவிடுங்க

பெண்: வள்ளி மானாக
வரணும் மணபொண்ணு
தங்க வேலாக
வரணும் மாப்பிள்ளை

குழு: வள்ளி மானாக
வரணும் மணபொண்ணு
தங்க வேலாக
வரணும் மாப்பிள்ளை

பெண்: இதுதானே
கல்யாணமென்று
ஊரே பாரட்ட வேணும்

பெண்: சுத்த மஞ்சள்
பட்டுச்சேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ
சூடத்தான் வேணும்

குழு: சுத்த மஞ்சள்
பட்டுச்சேல கட்டதான் வேணும்
முத்து முத்தா மல்லிகை பூ
சூடத்தான் வேணும்

பெண்: முல்லை வெள்ளி போல பொண்ணு
மின்னத்தான் வேணும்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்

குழு: நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்
நம்ம வீட்டு கல்யாணம்
இது நம்ம வீட்டு கல்யாணம்

A little space to find your voice.

About Adi Raakayee

Adi Raakayee is a song from Annakili (1976). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer